கவர்ச்சியோ கவர்ச்சி.. கிறங்கடித்த "பியூட்டிஷியன்".. திணறிய 7 கணவன்கள்.. இப்ப இந்த "மேடம்" காணோமாமே
சேலம்: திருமணமான இளம்பெண்ணை காணவில்லை என்று அவரது கணவர் போலீசில் புகார் தந்துள்ளார்.. என்ன நடந்தது சேலத்தில்? யார் அந்த பெண்?
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ளது எம்செட்டிபட்டி.. இங்கு வசித்து வந்தவர் மூர்த்தி.. 30 வயதாகிறது.. நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மூர்த்திக்கு ரக்ஷிதா என்ற பெண் இன்ஸ்டாகிராமில் அறிமுகமானார்... இவர் ஒரு பியூட்டிஷியன்.

இதையடுத்து மூர்த்தியும், ரக்ஷிதாவும், நட்பாக பழகி வந்தனர்.. பிறகு ஒருவருக்கொருவர் மெசேஜ்களை அனுப்ப ஆரம்பித்தனர்.. பிறகு, தனிமையில் சந்தித்து பேச தொடங்கியுள்ளனர்.. பிறகு, ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்துள்ளனர்.. இறுதியில், கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி 2 பேரும் ஓமலூர் ஈஸ்வரன் கோவிலில் கல்யாணமும் செய்து கொண்டனர்.
மாயம்: இந்நிலையில், தொளசம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு அலறியடித்து கொண்டு வந்தார் மூர்த்தி. அப்போது ஒரு புகாரையும் தந்தார்.. அதில், "இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பியூட்டீஷியன் ரஷீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். 3 மாதம் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கடந்த 5-ந்தேதி காலையில் இருந்து அவரை திடீரென காணவில்லை. வீட்டில் இருந்த 4 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு மாயமாகி விட்டார். அவரை கண்டுபிடித்து தர வேண்டும்" என்று புகாரில் கூறியிருந்தார்.
போலீசாரும் இந்த புகாரின்பேரில் ரக்ஷிதாவை தேட ஆரம்பித்தனர்.. இதற்காக ரக்ஷிதாவின் சோஷியல் மீடியா பக்கங்களை ஆய்வு செய்தனர். அதில், ரக்ஷிதா பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன..
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் ஏகப்பட்ட அக்கவுண்ட்களை வைத்திருக்கிறாராம் ரக்ஷிதா.. ஒவ்வொரு போலி அக்கவுண்ட்டுக்கும், தனக்கு ஒவ்வொரு பெயர்களை வைத்து கொண்டுள்ளார்.. வசதியான ஆண்களாக பார்த்து நட்பு வைத்துள்ளார்.. அவர்களை நேரில் சந்திப்பாக சொல்லுவாராம்.. பிறகு காதலிப்பதாக சொல்லி, கல்யாணம் வரை சென்றுவிடுவராம்.. கடைசியில் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு மாயமாகிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
ஆபாச சாட்டிங்: பல ஆண்களுடன் ஆபாச சாட்டிங் செய்து அவர்களை மயக்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.. சொகுசு கார்கள், பைக்குகளில், விதவிதமான போஸ்களை தந்து போட்டோ எடுத்துள்ளார்.. இந்த கவர்ச்சிவலையில் பெரும்பாலான ஆண்களும் விழுந்துள்ளனர்.. ஒரே ஒரு சொந்தக்காரர்கூட இல்லாமல், இத்தனை கல்யாணங்களையும், தனியே நடத்தியுள்ளார்.. ரக்ஷிதாவுடன் பழகியதுமே, அவரை பற்றின வண்டவாளம் மூர்த்திக்கு தெரிந்துள்ளது.. உடனே அவரிடம் பணத்தை சுருட்டிக் கொண்டு ரக்ஷிதா ஓட்டம் பிடித்து விட்டார்.
இதனிடையே, கடந்த மாதம் 20-ந்தேதி கோவை மாவட்டம் துடியலூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, 33 வயது பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.. அதில், தனது கணவர் சத்ய கணேஷ், ரக்ஷிதா என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, தன்னிடம் பணம் கேட்டு பிரச்சினை செய்கிறார் என்று கூறியுள்ளார்.. இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்ற விஷயம், தொளசம்பட்டி போலீசாருக்கு தெரியவந்தது.
அப்போதுதான், பைனான்சியர் மூர்த்தியை ஏமாற்றிய ரக்ஷிதாதான், இந்த ரக்ஷிதா என்று தெரியவந்தது.. அங்கேயும் நகை, பணத்துடன் மாயமாகி உள்ளர் ரக்ஷிதா.
ரட்சிதா: இப்போது விஷயம் என்னவென்றால், இதுவரைக்கும் ரக்ஷிதா 8 கல்யாணம் செய்திருக்கிறாராம்.. இப்போது அவரை காணவில்லை.. மூர்த்தியின் வீட்டில் இருந்து மாயமானதில் இருந்தே ரக்ஷிதாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகியிருக்கிறதாம்.. இதனால், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து தொளசம்பட்டி போலீசார் சொல்லும்போது, புகார் கொடுத்தவர் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். அவரது அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களை விசாரித்தபோது, அப்படி ஒரு பெண்ணையே இவருடன் சேர்ந்து பார்க்கவில்லை என்கிறார்கள்.. அதனால், முழுமையாக விசாரித்து தான் வழக்கு பதிவு செய்வோம்.. புகார் கொடுத்ததற்கான ரசீது மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை எப்ஐ.ஆர் பதிவு செய்யவில்லை" என்றனர்.
ஈரோடு சரிதா: இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு, மதுரையை சேர்ந்த சந்தியா என்ற பெண், 6 கல்யாணம் செய்தார்.. ஈரோட்டை சேர்ந்த சரிதா என்ற பெண் 5 கல்யாணம் செய்தார்.. இவர்கள் எல்லாமே கல்யாணமாகி மறுநாளே பணத்துடன் மிஸ் ஆனவர்கள்.. பெண்களை ஏமாற்றும் கல்யாணராமன்களை தாண்டி, ஆண்களை ஏமாற்றும் கல்யாண ராணிகள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டிருக்கிறது.. இதெல்லாம் எங்கே போயி முடியுமோ?
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications