Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனைவியின் வீடியோ.. செல்போனில் அந்த காட்சியை கண்டதுமே கதறிய ஏட்டு.. மனசாட்சியே இல்லையா? துடித்த சேலம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: ஏட்டு மனைவி எடுத்த விபரீத முடிவு, சேலம் மக்களை பதற வைத்து வருகிறது. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி கொண்டிருக்கும்நிலையில், நடந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.. இது பரபரப்பை சேலத்தில் கூட்டிவருகிறது.

சேலத்தை சேர்ந்த 38 வயதாகும் கோவிந்தராஜ், அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் சங்கீதா. இந்த தம்பதிக்கு ரோகித் (7), தர்ஷிகாஸ்ரீ(5) என்ற 2 குழந்தைகள்.. கொண்டலாம்பட்டி போலீஸ் குடியிருப்பின் 3வது மாடியில், கோவிந்தராஜ் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார்.

policeman

கோவிந்தராஜ்: கடந்த 3 மாத காலமாகவே தம்பதிக்குள் தகராறு இருந்து வந்துள்ளது.. காரணம், கோவிந்தராஜுக்கு, வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாககூறி சங்கீதா தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்றும் இவர்களுக்குள் வாக்குவாதம் வெடித்திருக்கிறது.. பிறகு கோவிந்தராஜ், டியூட்டிக்கு கிளம்பி சென்றுவிட்டதுமே, சங்கீதா தன்னுடைய 2 குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.

சங்கீதாவின் சடலத்தை கண்டதுமே அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரளாக மருத்துவமனைக்கு குவிந்துவிட்டார்கள்.. சங்கீதாவின் அப்பா, கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கோவிந்தராஜ் மீது புகார் தந்தார்.

தற்கொலை முயற்சி: ஆனால், மனைவி, குழந்தைகளின் சடலத்தை பார்த்ததுமே, அலறி துடித்த கோவிந்தராஜூம் தற்கொலைக்கு முயன்றார்.. அன்றைய தினம், ஒரே நாளில் 3 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாராம் கோவிந்தராஜ். ஆனால், அவரை போலீசார் காப்பாற்றி, அவரிடம் விசாரணையையும் ஆரம்பித்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகி, சேலம் மக்களை அதிர செய்துவருகிறது. அதாவது, ஏட்டு கோவிந்தராஜூக்கு, பெண் போலீஸ் ஒருவருடன் தகாத உறவு இருந்திருக்கிறது. இந்த விஷயம் சங்கீதாவுக்கு தெரியவந்ததையடுத்து, கணவரை கண்டித்திருக்கிறார்.. எனினும் கோவிந்தராஜ் எதையுமே பொருட்படுத்தாமல், அந்த பெண் போலீசுடன் நெருக்கமாக இருந்ததாக தெரிகிறது. இதில்தான் மனமுடைந்து சங்கீதா தற்கொலை செய்து கொண்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள்.

சந்தேகம்: ஆனால், கோவிந்தராஜின் நடத்தை குறித்து, சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு கோவிந்தராஜ், அப்பெண் போலீஸுடன் நட்பாகத்தான் பேசினேன் என்றாராம்.

குழந்தைகளை கொன்று, அதற்கு பிறகு சங்கீதாவும் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்ல, குழந்தைகள் எவ்வாறு கொலை செய்யப்பட்டனர்? என்பதை வீடியோ எடுத்தாராம் சங்கீதா.. இந்த வீடியோவை கணவருக்கும் அனுப்பி வைத்துவிட்டு, அதற்கு பிறகு தூக்கில் தொங்கியதாக தற்போது திடீர் தகவல் வெளியாகியுள்ளது.

விஷ மாத்திரை: அந்த வீடியோவில், அந்த முதலில் குழந்தைகளுக்கு விஷ மாத்திரையை தண்ணீரில் கரைத்து கொடுத்துள்ளார் சங்கீதா.. பிறகு குழந்தைகள் 2 பேரும் தப்பி செல்லக்கூடாது என்பதற்காக, அவர்களது கை, கால்களை கட்டிப்போட்டு, அவர்களின் வாயில் டேப் போட்டு ஒட்டியிருக்கிறார்.. அதற்கு பிறகு தூக்கில் தொங்க விட்டுள்ளார்.

இந்த காட்சிகளைதான், கணவருக்கு சங்கீதா வீடியோவாக எடுத்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த வீடியோ காட்சிகளை கணவர் உடனடியாக பார்க்கவில்லை.. சங்கீதா வீட்டில் போன் எடுக்கவில்லை என்றதுமே, பதறியடித்து கொண்டு வீட்டுக்கு அவசரமாக வந்திருக்கிறார். அதற்கு பிறகே விஷயம் தெரியவந்துள்ளது.. இதையடுத்து, கோவிந்தராஜின் செல்போனையும், சங்கீதாவின் செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்..

டெலிட் வீடியோ: இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "2 பேரின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, அதில் என்னென்ன தகவல்கள் உள்ளன? வீடியோக்கள் உள்ளனவா? டெலிட் செய்யப்பட்டுவிட்டதா? அப்படி டெலிட் ஆகியிருந்தால், அதை யார் டெலிட் செய்தது? என்றெல்லாம் விசாரணை நடக்கிறது. கைப்பற்றப்பட்ட 2 செல்போன்களையும் ஆய்வுக்கு அனுப்ப உள்ளோம்.

ஆனால், அந்த வீடியோவை சங்கீதாவே எடுத்தாரா? அல்லது வேறு யாரேனும் எடுத்தார்களா? அல்லது 3 பேரையுமே யாராவது கொலை செய்திருப்பார்களா? என்றெல்லாம் விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

பெண் போலீஸ்: கோவிந்தராஜுக்கும் சங்கீதாவிற்கும், சம்பவத்தன்றும் தகராறு வெடித்துள்ளது.. கோவிந்தராஜ் வேலைக்கு புறப்படும்போது, மனைவியை திட்டி விட்டு கிளம்பி சென்றதாக தெரிகிறது.. இதனால்தான் சங்கீதா மனமுடைந்ததாக சொல்கிறார்கள். அதேபோல, பெண் போலீசுடன் கோவிந்தராஜ செல்போனில் பேசியதற்கான ஆதாரங்களை எடுக்கவும், சில தகவல்களை பெறவும் போலீசார் முடிவு செய்திருக்கிறார்களாம். அதன்படி, அவர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, துறை ரீதியான நடவடிக்கைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

வழக்கமாக, குழந்தைகள் இறந்து, மனைவி தற்கொலை செய்து கொண்டால், தற்கொலைக்கு துாண்டியதாக கணவர் மீது வழக்கு பதியப்படும். ஆனால், இந்த வழக்கில் சங்கீதாவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரில் அப்படி இல்லை... தற்கொலைக்கு கணவர் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைக்கவும் இல்லை. எனவே செல்போனில் கிடைக்கும் ஆதாரப்படி, வழக்கு மாற்றம் குறித்து முடிவு செய்யப்படும் என்கிறார்கள் போலீஸார்.

சேலம் சங்கீதாவின் தற்கொலை சம்பவத்தின் வீடியோ கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. துறை ரீதியான நடவடிக்கை போலீஸ்காரர் மீது எடுக்கப்பட்டாலும், அதேநேரம் போலீஸ்காரர் என்பதால் கோவிந்தராஜை காப்பாற்ற சிலர் முயற்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. ஆனால், அவர்கள் யார் என்று தெரியவில்லை.. அதேபோல, அந்த பெண் போலீஸ் யார் என்று தெரியவில்லை.. கோவிந்தராஜிடம் இது தொடர்பாகவும் விசாரிக்கிறார்களாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+