ஆரணி மஞ்சுளா மாதிரியே.. "மரத்தடிக்கு வந்துருங்க".. சேலம் பெண் விஏஓ ரொம்ப கேவலமா மாட்டிக்கிட்டாங்க
சேலம்: சேலம் விஏஓ செய்த காரியத்தை பார்த்து, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. இதையடுத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
பட்டா, பத்திரப்பதிவு போன்ற விஷயங்களில் லஞ்ச நடமாட்டம் பெருகியபடியே உள்ளது.. இதை தடுப்பதற்காகவே தமிழக அரசு பல்வேறு அதிரடிகளையும், கடிவாளங்களையும் பதிவுத்துறையில் கொண்டுவந்துள்ள.
பத்திரப்பதிவு: இதன்மூலம் லஞ்சம் கொடுக்காமல் பட்டா வாங்குவதும், பத்திரம் பதிவதும் சாத்தியமாகி வருகிறது. மேலும், பத்திரம் பதிவு செய்தவுடன் அவர்களுக்கு தானாகவே பட்டா தரும் வசதியையும் தமிழக அரசு அறிமுகம் செய்யபோகிறது.. எனினும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை பெருகியபடியே உள்ளது. அதிலும் பெண் அதிகாரிகளே, லஞ்சம் வாங்கி கைதாகி வருவது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.

இதோ சேலத்தில் பெண் விஏஓ ஒருவர் அசிங்கமாக லஞ்சம் வாங்கி சிக்கியிருக்கிறார்.. சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அடுத்த தும்பல் பட்டியை சேர்ந்தவர் அரவிந்த். பில்டிங் தொழில் செய்து வருகிறார் அரவிந்த்.
பட்டா மாறுதல்: இவரது தாத்தா தான செட்டில்மெண்ட் மூலம் விவசாய நிலத்தை அரவிந்துக்கு எழுதி வைத்தார்... அந்த நிலத்தை அரவிந்த்தும் அவரது அண்ணன் அஜித்குமாரும் பெயர் மாற்றம் செய்து பட்டா பெறுவதாக முடிவு செய்தனர்.. எனவே, சான்றிதழ் பெறுவதற்காக தும்பல் பட்டி விஏஓ பாலாம்மாள் என்பவரிடம் விண்ணப்பித்தார்கள்.
ஆனால், சான்றிதழ் வழங்க வேண்டுமானால் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டாராம் பாலம்மாள். லஞ்சம் கொடுக்க விரும்பாத சகோதரர்கள் 2 பேரும், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் இதுதொடர்பாக புகார் கொடுத்தனர். அதன்பேரில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் பாலம்மாளை கைது செய்தனர்.
லஞ்சம்: முதலில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம் விஏஓ பாலம்மாள்.. பிறகு பேரம் பேசி 15 ஆயிரம் ரூபாய் கேட்டாராம்.. அப்போதுகூட லஞ்சம் கொடுக்க அண்ணன்-தம்பிக்கு விருப்பமில்லாமல், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் தந்துள்ளார்கள்.. அவர்களது ஆலோசனையின் பேரில், விஏஓவிடம் பேசிய சகோதரர்கள் பணத்தை எங்கே கொண்டு வந்து தரவேண்டும் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு ஆபீசுக்கு வந்து தன்னுடைய கார் டிரைவரிடம் பணத்தை தருமாறு பாலம்மாள் சொல்லியிருக்கிறார்.
உடனே அரவிந்த், பணத்துடன் விஏஓ ஆபீஸ் சென்றிருக்கிறார்கள். அதற்குள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விஏஓ ஆபீஸை சுற்றிலும், லுங்கி கட்டிக்கொண்டு, தலையில் துண்டு அணிந்துகொண்டு மாறுவேடத்தில் கூலித்தொழிலாளர்கள் போல் காத்திருந்தனர்.
மரத்தடி: ஆனால், பாலாம்மாள் விஏஓ ஆபீசுக்குள் வராமல், ஆபீசுக்கு வெளியே உள்ள மரத்தடிக்கு வருமாறு அரவிந்திடம் சொல்லியிருக்கிறார்.. உடனே அரவிந்த் மரத்தடிக்கு 15,000 பணத்துடன் சென்றிருக்கிறார்.. அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார், பாலம்மாளை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய பின்னர் பாலம்மாளிடம் விசாரணை நடத்தி, அவரிடமிருந்த கைப்பையையும் பரிசோதனை செய்தனர்.. அதில் 18 ஆயிரம் இருந்திருக்கிறது. இதையடுத்து, பாலம்மாள், பாலம்மாளின் கார் டிரைவர் காமராஜர் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தையடுத்து, லஞ்ச வழக்கில் கைதான கிராம நிர்வாக அதிகாரி பாலம்மாளை பணியிடை நீக்கம் செய்து உதவி கலெக்டர் அம்பாயிரநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சமீப நாட்களாகவே, பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கிய நாகை விஏஓ செல்வி என்பவர் கைதானார்.. செல்வியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவரை அழைத்துச் சென்றதை, அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தார்களாம். அதுபோலவே ஆரணியில் சார்பதிவாளர் ஒருவர் சிக்கி கைதானார். இப்போது இந்த பெண் அதிகாரியும் கைதாகி உள்ளது அதிர்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications