சேலத்தில் வாடகை ரூமில் வர்ஷினியின் முரட்டு காதல்.. ஜோடியாக அந்த கோலத்தில் போட்டோ.. கேஸில் ட்விஸ்ட்
சேலம்: சேலம் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மாணவி சம்பவம் பெரும் அதிர்வலையை உண்டு பண்ணி வருகிறது.. மகளை தந்தையே விஷம் வைத்து கொன்றுவிட்டாரா? அல்லது மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது இந்த கொடூரத்தை செய்திருப்பார்களா? என்ற குழப்பம் நடந்து வரும்நிலையில், அதுகுறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது..
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பாரதி நகரை சேர்ந்தவர் வரதராஜன் (52). இவரது மனைவி உஷா (43). இந்த தம்பதியின் ஒரே மகள் வர்ஷினி.. 22 வயதாகிறது..

சித்தா மருத்துவ மாணவி
வர்ஷினி, சேலத்தில் உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் ஹோமியோபதி இறுதி ஆண்டு படித்து வந்தார். காலேஜ் செல்ல வசதியாக, சேலத்திலேயே, வாடகை அப்பார்ட்மென்ட் ஒன்றில் தனது தோழியுடன் தங்கி படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 5-ந் தேதி இரவு, வர்ஷினி தங்கி இருந்த வாடகை வீட்டில் உயிரிழந்து கிடப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தகவல் அறிந்த இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வர்ஷினியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.
வெளிப்புறம் தாழ்ப்பாள்
ஆரம்பத்தில் வர்ஷினி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு இருந்தது. ஆனால், அவர் தங்கி இருந்த ரூம் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது... இதையடுத்து, கொலை என்ற கோணத்தில் விசாரணை தொடங்கப்பட்டது.
வர்ஷினியுடன் தங்கி இருந்த தோழியிடம் போலீசார் விசாரித்த போது, சம்பவத்திற்கு முன்பு வர்ஷினியை அவரது அப்பா வரதராஜன் வந்து சந்தித்து சென்றதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து, வரதராஜனை தொடர்பு கொள்ள போலீசார் முயன்றபோது, அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது போலீசாருக்கு அடுத்த சந்தேகத்தை கிளப்பியது.
உடம்பில் நகக்கீறல்கள்
இந்நிலையில், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வெளியானது. அதில், வர்ஷினியின் கழுத்து நெரிக்கப்பட்டிருந்ததும், உடலில் நகக்கீறல்கள் இருந்ததும் தெரிய வந்தது. இதன் மூலம், வர்ஷினி கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது.. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் வர்ஷினியின் அப்பா வரதராஜனே இந்த கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. உஷா, வரதராஜனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர். வர்ஷினி சிறுமியாக இருந்த போதே அவரது முதல் கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு விட்டு சென்றுள்ளார்.
நெசவு தொழிலாளி - உஷா
பிறகு நெசவு தொழிலாளியான வரதராஜன், உஷாவையும், வர்ஷினியையும் தனது உலகமாக நினைத்து வாழ்ந்து வந்துள்ளார். தங்களது கஷ்டமான வாழ்க்கையையும் பொருட்படுத்தாமல், மகளை மருத்துவராக்க வேண்டும் என்ற கனவுடன் சித்த மருத்துவ கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளனர்.
ஆனால், வர்ஷினி, திருமணமாகி 2 குழந்தைகளுக்கு அப்பாவான நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த டேக்வாண்டோ பயிற்சியாளருடன் காதலில் ஈடுபட்டுள்ளார். அந்த நபரும், தனது மகள் வயது உள்ள பெண் என்றுகூட பாராமல் வர்ஷினியுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.
காதலனுடன் ஊர் சுற்றிய வர்ஷினி
இதனை அறிந்த பெற்றோர் பலமுறை அறிவுரை கூறினாலும், வர்ஷினி கேட்கவில்லை. கடந்த கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையில் வர்ஷினி சேலத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.. ஆனால், தன்னுடைய வீட்டுக்கு போகாமல், காதலனுடன் ஊரை சுற்றித் திரிந்துள்ளார்..
அதற்கு பிறகு வர்ஷினியும் அந்த நபரும், திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பிறகு வீட்டுக்கு போகாமலே, சேலத்துக்கு கிளம்பி வந்துவிட்டாராம். இதனிடையே மகள் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்ட போட்டோவை உறவினர் ஒருவர் பெற்றோருக்கு அனுப்பி உள்ளார்.
திருமண போட்டோ
இந்த போட்டோவை பார்த்ததுமே பெற்றோர் கடுமையான அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. உடனே கடந்த 5-ந் தேதி சேலத்திற்கு வந்த வரதராஜன் மகளை நெல்லைக்கு அழைத்து சென்றுள்ளார்.. மீண்டும் மகளுக்கு அறிவுரை சொல்லி உள்ளார்.. அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், வர்ஷினி மீண்டும் பஸ் ஏறி சேலத்திற்கு வந்து விட்டாராம்..
இதனால் மனசு கேட்காமல் வரதராஜன், மகளை மீண்டும் சமாதானம் செய்வதற்காக அன்று மாலையே சேலம் சென்றிருக்கிறார்.. அப்போது மகளின் ரூமில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இன்னும் வளர்ப்பு தந்தை தலைமறைவாகவே உள்ளதால் அவரை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications