லாட்ஜில் சிக்கிய லட்சுமி.. அம்மாவை பார்த்ததுமே கதறிய 2 பிஞ்சுகள்.. கல்லாகி போன பெத்த மனம்.. கொடுமை
2 குழந்தைகளையும் மறந்து, கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார் இளம்பெண் ஒருவர்
சேலம்: 2 குழந்தைகளையும் மறந்து, கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார் அந்த பெண்.. இறுதியில் போலீசார் தலையிட்டதன்பேரில், இந்த வழக்கு சுமூக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ளது செம்மாண்டப்பட்டி என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் சவுண்டப்பன்.. இவர் ஒரு நெசவாளி.. தன்னுடைய வீட்டிலேயே பட்டு நெசவு கைத்தறி அமைத்து நெசவு தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி பெயர் லட்சுமி... இவர்களுக்கு 9 வயதில் ஆண் குழந்தையும், 7 வயதில் பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இதேபோன்று ஓமலூர் அருகேயுள்ள பொட்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவருக்கு திருமணமாகி ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

ஜாலி டூர்
இந்தநிலையில், தனபால் செம்மாண்டப்பட்டியில் சவுண்டப்பன் வீட்டருகே உள்ள பட்டு தறிக்கூடத்தில், பட்டு நெசவு செய்யும் கூலி வேலை செய்து வருகிறார். அங்குதான் தனபாலும், லட்சுமியும் அடிக்கடி சந்தித்துக் கொள்ள நேரிட்டது.. இந்த பழக்கம், கள்ளக்காதலாக மாறியது.. இருவரும் ஏற்காடு, கொல்லிமலை, மேட்டூர் என பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஜாலியாக இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், ஒருவரையொருவர் விட்டு இன்னொருவர் பிரிந்திருக்க முடியாத அளவுக்கு நெருக்கம் கூடிவிட்டது.. இதனால், 2 பேருமே அவரவர் குடும்பத்தை விட்டு வெளியேறினார்கள்...

லட்சுமி ஓட்டம்
லட்சுமி தன்னுடைய 2 குழந்தைகளையும் தவிக்கவிட்டு விட்டு லட்சுமி தனபாலுடன் ஓட்டம் பிடித்தார்... இதனிடையே மனைவியை காணவில்லை என்று லட்சுமியின் கணவர் ஓமலூர் போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும் இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, பல்வேறு இடங்களில் லட்சுமியை தேடி வந்தனர். ஒரு வாரத்துக்கு பிறகுதான், லட்சுமியின் இருப்பிடம் அறிந்தனர்.. லட்சுமியுடன் தனபாலும் தங்கி இருப்பதும், இவர்களின் கள்ளக்காதல் விவகாரமும் தெரியவந்தது..

லாட்ஜூக்குள்
புதுச்சேரியில் ரூம் எடுத்து இந்த ஜோடி தங்கியிருந்துள்ளார்கள்.. அங்கு சென்ற போலீசார், இவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.. அப்போது ஸ்டேஷனில், லட்சுமியும், அவரது 2 குழந்தைகளும் இருந்தனர்.. அம்மாவை பார்த்ததுமே குழந்தைகள் கதறி கதறி அழுதனர்.. கணவர் சவுண்டப்பனும் மனைவியை பார்த்து அழுதார்.. தங்களுடனே வந்துவிடுமாறு லட்சுமியிடம், குழந்தைகளும் கணவரும் கெஞ்சினார்கள்.. ஆனால், தனக்கு குழந்தைகளும் வேண்டாம், கணவரும் வேண்டாம் என்று லட்சுமி கறாராக சொல்லிவிட்டார். அத்துடன், தனபாலுடன் தான் போவேன் என்றும் உறுதியாக சொன்னார்.

சவுண்ட் ஜாஸ்தி
ஆனால், இதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.. கணவனுடன் செல்ல விரும்பாத லட்சுமியை, காதலனுடன் அனுப்பவும் போலீசார் மறுத்து விட்டனர்.. அதனால், லட்சுமியை அவர் அம்மாவுடன் அனுப்பி வைத்தனர். இந்த பஞ்சாயத்து நடக்கும்போதே, தனபாலின் மனைவியும் குழந்தைகளுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்.. கணவனின் சட்டையை பிடித்து தகராறு செய்து, தன்னுடன் வீட்டுக்கு வருமாறு கூச்சலிட்டார்... இதையடுத்து போலீசாரே இதில் தலையிட்டு, தனபாலை அவரது மனைவி, குழந்தைகளுடன் அனுப்பி வைத்தனர்... போலீஸ் ஸ்டேஷனுக்குள் கள்ளக்காதல் ஜோடியால் ஏற்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications