பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்த இளைஞர்.. மனைவியின் சகோதரியுடன் மீண்டும் திருமணம்
சேலம்: சேலத்தில் இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்து கொண்ட இளைஞர், தற்போது அந்த பெண்ணின் பெரியம்மாள் மகளையும் ஏமாற்றி திருமணம் செய்து இருப்பதாக பாதிக்கப்பட்ட இளம் பெண் புகார் அளித்துள்ளார்.
சேலம் குளத்தூரைச் சேர்ந்தவர் கார்த்திக் இவர் தனது உறவினரின் மகளான நாமக்கல் மாவட்டம் குமாரபளையத்தைச் சேர்ந்தவர் இளவரசியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக், இளவரசியை ஏமாற்றி கர்ப்பம் ஆக்கியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இளவரசி திருச்செங்கோடு மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கார்த்திக்கும், இளரவசிக்கும் கடந்த பிப்ரவரி 11ம் தேதி போலீசார் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
ஆனால் கார்த்தியின் பெற்றோர், இளவரசியை மருமகளாக ஏற்க மறுத்ததோடு, சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. திருமணம் ஆன மறுநாளே வீட்டை விட்டு சென்ற கார்த்திக் தற்போது வரை வீடு திரும்பவில்லை என்றும் தனது பெரியம்மாள் மகளை தற்போது கார்த்திக் திருமணம் செய்திருப்பதாகவும் சேலம் போலீசில் இளவரசி புகார் அளித்துள்ளார்.
முன்னதாக இளவரசி, தனது சகோதரியை கார்த்திக் காதலிப்பது போல் நாடகமாடியதாகவும், அவருக்கு ஏராளமான பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகார் குறித்து சேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications