ஏற்காடு மலை பாதையில் காதலியை விஷஊசி போட்டு கொன்ற காதலன்!செல்போனில் கொட்டி கிடக்கும் ஆபாச வீடியோக்கள்
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் காதலிக்கு விஷஊசி போட்டு கொலை செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட காதலனின் செல்போனை ஆய்வு செய்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த போனில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததாம்.
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த தனியார் பயிற்சி மைய ஆசிரியை லோகநாயகி (34). இவர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே பெண்கள் விடுதியில் தங்கியிருந்தார். இவர் கடந்த 4 நாட்களாக காணவில்லை.

அவர் தங்கியிருந்த விடுதிக்கும் செல்லவில்லை. இதையடுத்து தங்கும் விடுதியின் வார்டன் சார்பில் சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
செல்போன் சிக்னல்
இந்த நிலையில் அவரது செல்போனை வைத்து விசாரித்த போது அவருடைய செல்போன் ஏற்காடு மலை பாதையில் ஸ்விட்ச் ஆப் ஆனது தெரியவந்தது. அவர் யாருடன் பேசியிருக்கிறார் என விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் திருச்சியை சேர்ந்த அப்துல் ஹபீஸ் (22) என்பவருடன் பேசியிருந்தது தெரியவந்தது.
கல்லூரி மாணவன்
அவர் பொறியியல் கல்லூரி மாணவன். இதையடுத்து அப்துலை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் அவர் நடந்தவற்றை கூறினார். அதில் அப்துல் ஹபீஸுக்கும் லோகநாயகிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியதாம்.
12 வயது மூத்தவர்
அப்துலை விட லோகநாயகி 12 வயது அதிகம். இந்த நிலையில் அப்துலுக்கு இன்னொரு பெண்ணுடனும் பழக்கம் இருந்ததாம். இதனால் லோகநாயகியை அப்துல் தவிர்த்தாராம். ஆனால் லோகநாயகியோ தன்னை திருமணம் செய்து கொள் என அப்துலை சதா கேட்டு வந்ததாக தெரிகிறது.
தோழியிடம் உதவி கேட்ட அப்துல்
ஆனால் அப்துல் மறுத்தாராம். இதனால் அப்துல் தனது மற்றொரு காதலி மற்றும் அவருடைய தோழியிடம் உதவி செய்யுமாறு கேட்டாராம். அதற்கு அவர்கள் விஷ ஊசி போட்டு கொன்றுவிடுமாறு கூறினாராம். இதனால் அப்துல் வாடகை காரை எடுத்துக் கொண்டு மார்ச் 1-ஆம் தேதி காதலி காவ்யா (22) மற்றும் தோழி மோனிஷா (21)ஆகியோருடன் சேலம் சென்றார். அங்கு லோகநாயகியை அழைத்து கொண்டு ஏற்காட்டுக்கு சென்றனர். அப்போது அவருக்கு ஏதோ ஜூஸ் கலந்து கொடுத்தனர். அதை குடித்ததும் லோகநாயகி மயங்கி விட்டார். பின்னர் லோகநாயகிக்கு விஷ ஊசியை போட்டுள்ளனர். அவர் இறந்ததை உறுதிப்படுத்திக் கொண்டு அவரது உடலை ஏற்காடுப மலை பாதையில் உள்ள ஒரு பாலத்தில் இருந்து தூக்கி வீசியுள்ளனர்.
66 அடி ஆழ பள்ளம்
பின்னர் எதுவும் தெரியாதது போல் அவர்கள் மூவரும் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இதையடுத்து அப்துலின் வாக்குமூலத்தை அடுத்து போலீஸார், சம்பவ இடத்தில் இருந்து 66 அடி ஆழத்தில் இருந்த லோகநாயகியின் உடலை மீட்டனர். இதையடுத்து அப்துல், மோனிஷா, காவ்யா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
காதலோ காதல்
மேலும் விசாரணையில் காவ்யாவுடன் அப்துலுக்கு காதல் இருந்ததை போல் அவருடைய தோழி மோனிஷாவுடனும் காதல் ஏற்பட்டதாம். அதாவது கொரோனா காலத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவி மோனிஷா துறையூரில் முகாமுக்கு வந்த போது அப்துல், கொரோனா நிவாரணங்களை வழங்கினாராம். இதனால் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டதாம்.
தற்கொலை மிரட்டல்
இதனிடையே காவ்யாவை திருமணம் செய்ய அப்துல் முடிவு செய்திருந்தாராம். இது லோகநாயகிக்கு தெரியவந்ததும், அவர், "என்னுடன் பல்வேறு இடங்களுக்கு வந்து ஊர் சுற்றி பழகிவிட்டு, இப்போது வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறாயா, உன்னை சும்மா விடமாட்டேன். உன் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன்" என அழுதாராம்.
சகோதரியாக பார்த்தேன்
இதையடுத்து காவ்யாவிடம் சென்ற அப்துல், "நான் ஒரு பெண்ணை சகோதரியாக பார்த்தேன் , ஆனால் அவர் என்னை விரும்புவதாகவும் திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்துகிறார். இல்லாவிட்டால் என் பெயரை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டுகிறார், என்ன செய்யலாம்" என கேட்டாராம். மேலும் தனது தோழி மோனிஷா, மருத்துவ மாணவி, அவரிடம் சொல்லி விஷ ஊசி போட்டு கொன்றுவிடலாம் என சொல்லவே காவ்யா ஒப்புக் கொண்டுள்ளாராம்.
ஆபாச வீடியோக்கள்
ஆனால் மோனிஷாவை கட்டாயப்படுத்தி விஷ ஊசி கொண்டு வர சொன்னாராம். அதை போட்டுதான் இவர்கள் அந்த பெண்ணை கொன்றுள்ளனர். இந்த நிலையில் அப்துலின் போனை பார்த்த போலீஸார் ஆடி போய்விட்டனர். அவருடைய போனில் நிறைய பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருக்கின்றனராம். அது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications