சேலத்தில் காதலிக்கு விஷ ஊசி போட்ட நர்ஸ்.. அதென்ன ஆபாச வீடியோ? 2 பெண்ணுடன் காதல்.. ஆடிப்போன ஏற்காடு
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பாலத்தில், 20 அடி பள்ளத்தில் லோகநாயகி என்ற பெண் மீட்கப்பட்டார்.. இவரது காதலன் அப்துல் ஹபீஸ் ஏற்கனவே வாக்குமூலம் தந்திருந்தார்.. அதேபோல, லோகநாயகி தன்னுடைய பெயரை அல்பியா என்று மாற்றி முஸ்லிம் மதத்திற்கு மாறியதாக தகவல்களும் வெளியாகியிருந்தன.. இந்நிலையில், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த நர்ஸ் பகீர் வாக்குமூலம் தந்துள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூர் விநாயகர் நகரை சேர்ந்தவர் லோகநாயகி (எ) அல்பியா (31).. இவர் ஒரு டீச்சர்..சேலம் புது ஸ்டாண்டு அருகிலேயே ஒரு ஹாஸ்டலில் தங்கி வேலை பார்த்து வந்தார்...

ஏற்காடு மலைப்பகுதி
4 நாட்களுக்கு முன்பு இவரை சிலர் கொலை செய்து, ஏற்காடு 60 அடி பாலப்பகுதியிலிருந்து தூக்கி வீசியிருந்தனர். இது சம்பந்தமான விசாரணையை ஏற்காடு போலீசார் நடத்தி வந்த நிலையில், லோகநாயகியின் காதலன் அப்துல் ஹபீஸ் என்ற மாணவரையும், அவருக்கு உதவியாக இருந்த தாஹியா சுல்தானா என்ற நபரையும், மோனிஷா என்ற மாணவியையும் போலீசார் கைது செய்தனர்.
காதலன் அப்துல் ஹபூஸ், பெரம்பலூரை சேர்ந்தவர்.. பிஇ 4ம் ஆண்டு படித்து வருகிறார்.. தாஹியா சுல்தானா சென்னையில் ஐடி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். துறையூர் செங்காட்டுப்பட்டியை சேர்ந்த மோனிஷா, நர்சிங் இறுதியாண்டு மாணவி ஆவார். இவர்கள் அனைவருக்குமே 22 வயதாகிறது.
கொலையாளி வாக்குமூலம்
காதலன் அப்துல் ஹபூஸிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தன்னை திருமணம் செய்யாமல் வேறு பெண்ணை மணந்தால், குடும்பத்துடன் கொன்றுவிடுவேன் என டீச்சர் லோகநாயகி மிரட்டினாராம். அதனால், தன்னுடைய 2 காதலிகளுடன் சேர்ந்து விஷ ஊசி போட்டு லோகநாயகியை கொன்றதாக அப்துல் ஹபீஸ் வாக்குமூலம் அளித்திருந்தார்.
அத்துடன், லோகநாயகியை கொல்வதற்கு விஷ ஊசியை செலுத்த, நர்சிங் மாணவி மோனிஷா உதவியதும் தெரியவந்தது.. எனவே, மோனிஷாவிடமும் போலீசார் தனியாக விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
நீதான் ஊசி போட வேண்டும்
மோனிஷா வாக்குமூலம் குறித்து போலீசார் சொன்னதாவது: "அப்துல் ஹபீஸ், மோனிஷா இருவரும் காதலித்து வந்தனர்.. தங்கை உறவு கொண்ட தாஹியா சுல்தானாவின் அண்ணனை திருமணம் செய்து கொலை செய்த லோகநாயகியை பழிவாங்க வேண்டும்.. அவருக்கு ஊசி போட்டு கொல்ல வேண்டும். அதனை நீதான் செய்ய வேண்டும். அதை மட்டும் நீ செய்துட்டால், உன்னையே கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி என்னை சேலத்திற்கு அழைத்து வந்தார்.
ஆபரேஷன் செய்வதற்கான மயக்க மருந்து, ஊசி இரண்டையும் தந்துவிட்டு, நீங்களே போட்டுக்குங்க என்று அப்துல் ஹபீசிடம் சொன்னேன்.. ஆனால் நீ தான், ஊசியை போட வேண்டும் என்று என்னை அப்துல் ஹபீஸ் மிரட்டினார். அதனால் தான், ஏற்காடு மலைப்பாதையில் காருக்குள் வைத்து, பெயின் கில்லர் என்று சொல்லி, முதல் ஊசியை அதிக மயக்க மருந்து டோஸூடன் போட்டேன்.
மோனிஷா வாக்குமூலம்
இதில் லோகநாயகி மயங்கியதும், இன்னொரு ஊசியை போட்டேன். அவர் மூச்சு திணறி இறந்துவிட்டார்.. பிறகு அவரது உடலை தூக்கி போட்டுவிட்டு வந்துவிட்டோம்" என்று மோனிஷா வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல, ஊசியை போட மோனிஷா முதலில் மறுத்துள்ளார்.. அப்துல் ஹபீஸ்தான் அவரை கட்டாயப்படுத்தி ஊசி போட வைத்துள்ளார். அதுமட்டுமல்ல, அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் அந்தரங்க வீடியோ போன்றவற்றை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.. இதனிடையே இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாடகை காரை நேற்று, தனியார் கார் நிறுவனத்தில் இருந்து ஏற்காடு போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications