Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாத்ரூம் கிட்ட "ஆபாச சைகை".. கதறிய மாணவிகள்.. ஸ்பாட்டுக்கு வந்த ஆபீசர்.. ஆசிரியரின் ஹைலைட்டே அங்கதான்

சேலத்தில் பள்ளி ஆசிரியர் பாலியல் சீண்டல் காரணமாக அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சேலம்: வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி?.. ஒழுக்கத்தை போதிக்கக்கூடிய ஆசிரியர்களே அட்டகாசங்கள் செய்தால் எப்படி? சேலம் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் கடந்த 2 நாட்களாகவே மிகுந்த அதிர்ச்சியையும், பெற்றோர்களிடம் கவலையையும் உண்டுபண்ணி வருகிறது.. இது தொடர்பான செய்திகளும் இணையத்தில் வேகவேகமாக பரவி வருகின்றன.

பள்ளி மாணவிகள் பல இடங்களில் பாலியல் தொல்லைகளை சந்தித்து வருவது அதிகமாகிவிட்டது.. நடந்து வரும் சம்பவங்கள் எல்லாம் மிகவும் வேதனை அளிப்பதாக கல்வி அதிகாரிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவித்து வருகிறார்கள்..
ஆசிரியர்கள்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால், இவர்களை வழிநடத்தக்கூடிய தலைமை ஆசிரியர்களே பாலியல் அத்துமீறல்களில் நடந்து கொள்வது அதிர்ச்சியை தந்து வருகிறது.

 உருட்டுக்கட்டை

உருட்டுக்கட்டை

கர்நாடகத்தில் கடந்த வாரம் ஒருநாள், நடுராத்திரி தண்ணி அடித்துவிட்டு, தூங்கி கொண்டிருந்த ஹாஸ்டல் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்திருக்கிறார் அப்பள்ளி தலைமை ஆசிரியர்.. இதனால் வெகுண்டெழுந்த அந்த பள்ளியின் மாணவிகளே, தலைமை ஆசிரியரை கயிறு போட்டு கட்டிவைத்து "உருட்டுக்கட்டை" பாடம் நடத்தினார்கள். ஆந்திராவிலும், இப்படித்தான், பள்ளியிலேயே ஒரு டீச்சருடன் சல்லாபத்தில் ஈடுபட்டுள்ளார் தலைமை ஆசிரியர்.. இவர்களின் அட்டகாசம் தாங்காமல், அந்த பள்ளி மாணவர்களே இந்த அந்தரங்கத்தை வீடியோவாக எடுத்து, சோஷியல் மீடியாவில் வெளியிட்ட அதிர்ச்சியும் நடந்தது.

உல்லாசம்

உல்லாசம்

இந்த இரு சம்பவங்கள் நடந்த அதே தருணத்தில் நம் தமிழகத்திலும் இதே அட்டகாசம் நடந்தது.. பாஜக நிர்வாகி நடத்தி வரும், நாகை நர்சிங் காலேஜில், ஒரு மாணவிக்கு போனை போட்டு பாலியல் டார்ச்சர் தந்துள்ளார் சதீஷ் என்ற பேராசிரியர்.. மாதவிடாய் என்று சொல்லியும், தவறாக பேசி கட்டாயப்படுத்தி உள்ளார்.. இந்த சதீஷ் இப்போது ஜெயிலில் உள்ளார்.. புதுக்கோட்டை அரசு கல்லூரியிலும் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார் இன்னொரு பேராசிரியர்.. இந்த ஆடியோவும் வெளியாகி, பெற்றோர்கள் மத்தியில் நடுக்கத்தை ஏற்படுத்திவிட்டு போனது.

கேவலம்

கேவலம்

இப்போதும் ஒரு கேவலமான சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளது.. சேலத்தான்பட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது... இந்த பள்ளியின் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சுரேஷ் பாபு.. இவர் அஸ்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்... இவர் மீது புகார்கள் வராத நாளே கிடையாது.. பள்ளி வளாகத்திலேயே எல்லா அக்கிரமங்களையும் செய்து வந்திருக்கிறார்.. தினமும் தண்ணி அடித்துவிட்டுதான் கிளாசுக்கு வருவாராம்... மாணவிகளிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.. அத்துடன், மாணவிகளை அழைத்து தினமும் தனக்கு கை, கால்களை பிடித்துவிட சொல்லி கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.

 சிகரெட் சிகரெட்

சிகரெட் சிகரெட்

எனவே, இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் முஹரத் பேகத்திடம், மாணவிகள் பலமுறை புகார்கள் சொல்லி உள்ளார்கள்.. ஆனால், அதனை தலைமை ஆசிரியர் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்திவிட்டதாகவும், இதுகுறித்து யார்கிட்டயும் சொல்லக்கூடாது மாணவிகளையே மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.. இந்நிலையில், அடுத்த சேட்டையில் இறங்கி உள்ளார் சுரேஷ்பாபு.. மாணவிகளின் பாத்ரூம் அருகே, கையில் சிகரெட்டுடன் வந்து நின்று கொள்வாராம்.. யார் கேட்டாலும், சிகரெட் பிடிக்க அங்கே நிற்பதாக சொல்லி உள்ளார்.. அத்துடன் மாணவிகளின் கழிப்பிடம் அருகே நின்று, ஆபாச சைகைகளையும் காட்டி உள்ளார்.

பாத்ரூமில்

பாத்ரூமில்

இதற்கு மேல் பொறுக்க முடியாமல், மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம், சுரேஷ் பாபுவின் அத்துமீறல் பற்றி சொல்லி அழுதுள்ளனர்.. இதனால் கொந்தளித்து போன பெற்றோர்கள், நேரடியாக ஸ்கூலுக்கு வந்துவிட்டார்கள்.. ஆசிரியர் சுரேஷ் பாபு மீது ஆத்திரம் கொண்டு அவரை சரமாரியாக தாக்கியும் உள்ளனர்... இந்த தாக்குதலில் சுரேஷ்பாபு படுகாயம் அடைந்தார்... அப்போதும் ஆத்திரம் தீராத பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதற்கு பிறகு சூரமங்கலம் போலீசுக்கு இந்த விஷயம் சென்றதுமே, அவர்கள் விரைந்து வந்தனர்.. நடந்த சம்பவங்கள் குறித்தும் விசாரணையை மேற்கொண்டனர்...

 ஃபுல் போதை

ஃபுல் போதை

முதற்கட்டமாக பள்ளி நிர்வாகம், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.. சம்பந்தப்பட்ட சுரேஷ்பாபும் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான் போலீசாருக்கே ஷாக் தந்தார் சுரேஷ் பாபு.. இவ்வளவு களேபரங்கள் நடந்தும்கூட, அந்த நேரத்தில்கூட முழு போதையில் இருந்தாராம் சுரேஷ்பாபு.. அதனால், மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு புகார்கள் சொல்லப்படவும், மாவட்ட கல்வி அலுவலர் சேகர் மற்றும் சூரமங்கலம் வட்டாட்சியர் ஆகியோர் பள்ளிக்கு அவசர அவசரமாக கிளம்பி வந்தனர்..

 ஹைலைட்

ஹைலைட்

அவர்களே நேரடியாகவே விசாரணையை நடத்தினர்.. இறுதியில் சுரேஷ்பாபுவை போலீசார் கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.. எனினும், கொந்தளிப்பு அடங்காத பெற்றோர்கள், முற்றுகை போராட்டத்தில் இருந்து கிளம்பி, ஸ்டேஷனுக்கே வந்துவிட்டனர்.. பாலியல் வழக்கு பதிவு செய்து, சுரேஷ்பாபுவை ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று ஸ்டேஷன் வாசலில் நின்று முழக்கமிட்டார்கள்.. இதில் ஒரு ஹைலைட் என்னவென்றால், இந்த சுரேஷ்பாபுவுக்கு கல்யாணமாகிவிட்டது. இவரது மனைவியும் ஒரு டீச்சராம்.. அதுவும் இந்த ஸ்கூலிலேயே அவரும் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறாராம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+