24 கேரட் தங்க தட்டு வடை.. சேலம் தெருக்களில் சுடச்சுட "தங்க வடை" விற்பனை.. குபீர்னு நுழைந்த ஆபீசர்ஸ்
சேலம்: சேலத்தில் இயங்கி வரும் தட்டு வடை கடைகளில், உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியிருப்பது பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.
சேலத்தில் புகழ்பெற்ற உணவு என்றால், அது தட்டு வடை செட் தான்.. இந்த மாவட்ட மக்களால் பெரிதும் விரும்பி சாப்பிடப்படுவது இந்த தட்டு வடையாகும். அதனால்தான், சேலம் பகுதிகளில், சாயங்காலம் 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இந்த தட்டு வடை செட் அமோகமாக விற்பனையாகும்.

தட்டுவடை: இந்த உணவுக்கு இருக்கும் புகழை மையமாக வைத்து, ஸ்ரீதர் என்பவர் புகழ்பெற்று வருகிறார்.. இவர் வீராணம் பகுதியை சேர்ந்தவர்.. தற்போது, சேலம் பட்டை கோயில் அம்மாபேட்டை மெயின் ரோடு தட்டுவடை செட் கடை வைத்திருக்கிறார்..
தட்டு வடை செட், நொறுக்கல், சுண்டல், பிரட் ஆம்லெட், முட்டை ப்ரை, ஓரியோ செட், கதம்பம் செட், முட்டை செட், ட்ரை ஃப்ரூட்ஸ் என 50க்கும் மேற்பட்ட வகைகளில் தட்டு வடை செட்டாக தயாரித்து விற்று வருகிறார்.. அதேபோல, அட்சய திருதி நாட்களில், தங்க தட்டு வடை செட் விற்பனையும் செய்து வருகிறார்.. நேற்று அட்சய திருதி என்பதால், இப்போதும் தங்க தட்டுவடை அறிவிப்பை வெளியிட்டு, பரபரப்பை கிளப்பினார்..
உலர் பழங்கள்: இதன் சிறப்பு என்னவென்றால், இந்த தங்க தட்டு வடையில் உலர் பழ வகைகள், காய்கறிகள், தட்டு வடை சட்னி, தங்க பேப்பர் போன்றவை பயன்படுத்தப்படுகிறாம். அதாவது, கோல்ட் பாயில் பேப்பரில் தட்டு வடை செட் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.. இதில் ஒன்று 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை என்று நிர்ணயித்துள்ளார்.
இப்படி ஒரு அறிவிப்பை பார்த்ததுமே சேலம் மக்கள், கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க தடை வடை செட் கேட்டு முன்பதிவு செய்துவிட்டார்களாம்.. இந்த தட்டு வடை செட் மீது வைக்கப்படும் தங்க பேப்பர் சாப்பிடக்கூடியது என்றும், இதனால், எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது எனறும் சொல்கிறார்கள்.
உணவு பாதுகாப்பு: இந்த நிலையில், சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள திருவிக. சாலையில் செயல்பட்டுவரும், "துருவன்" தட்டுகடை செட் கடையில், "24 காரட் தங்க தட்டுவடை செட் வழங்கப்படும்" என்ற விளம்பரம் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து பரவியதுடன், உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்துக்கும் சென்றது.. இதையடுத்து, சம்பந்தப்பட்ட தட்டு வடை செட் கடைக்குள் அதிகாரிகள் நுழைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கோல்டு பாயில் பேப்பரில் உணவு தர குறியீடுகள் ஏதும் இல்லாமல், "தங்க தட்டு வடை செட்" என்ற பெயரில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.. எனினும், இந்த கோல்ட் பாயில் பேப்பர், மனிதர்கள் சாப்பிட தகுந்ததா? என்பதை அறிவதற்காக, பாதுகாப்பு துறை அதிகாரிகள், கோல்ட் பாயில் பேப்பரை கைப்பற்றி சோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
நடவடிக்கை: இந்த ஆய்வு முடிவின் அடிப்படையில், தட்டு வடை செட் கடை உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.. அதுமட்டுமல்ல, ரிசல்ட் வரும்வரை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பில் அந்த கடை தற்போது உள்ளதாம்..!!












Click it and Unblock the Notifications