எங்களை பார்த்தால் கூட முதல்வர் சிரிப்பதில்லை! ஸ்டாலின் ஊரில் இல்லாத போது அமைச்சர் காந்தி ஓபன் டாக்!
சேலம்: எங்களை பார்த்தால் கூட முதலமைச்சர் சிரிப்பதில்லை எனப் பேசி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை காந்தி.
மக்களை பற்றியே முதலமைச்சர் ஸ்டாலின் சிந்தித்துக் கொண்டிருப்பதால் தான் தங்களை பார்க்கும் போது அவர் சிரிப்பதில்லை என தனது பேச்சுக்கு காரணம் ஒன்றையும் கூறியிருக்கிறார் அமைச்சர் காந்தி.

ஸ்டாலின் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில் அமைச்சர் காந்தியின் இந்தப் பேச்சு தேவையற்ற ஒன்றாக கருதப்படுகிறது.
அமைச்சர் ராணிப்பேட்டை காந்தியை பொறுத்தவரை பார்ப்பதற்கு தான் மிரட்டலான தோற்றமும் ஆஜானுபாகுவான உடலும் கொண்டவர். ஆனால் அவர் பேசினால் பச்சக்குழந்தையை போல் இருக்கும்.
அந்தளவுக்கு மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் கொட்டித் தீர்த்துவிடுவார். இவரது பேசும் ஸ்லாங்கை பார்த்து, சட்டசபையில் சக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.
அந்தளவுக்கு வெகுளித்தனமாக பேசுவார். அதேசமயம் கட்சிப்பணிகள் என வந்துவிட்டால் கோபம் கட்டுக்கடங்காமல் வரும். இப்போது உடல்நிலையை கருத்தில் கொண்டு கோபத்தைக் குறைத்துக் கொண்டு சிரித்து பேச பழகிக் கொண்டார்.
இதனிடையே அடுத்த மாதம் சேலம் மாவட்டத்திற்கு முதல்வர் வருகை தரவுள்ளதால், சேலம் கோ ஆப்டெக்ஸ் பட்டு விற்பனை நிலையம் சீரமைப்பு பணிகளை ஆய்வுச் செய்யச் சென்ற அமைச்சர் காந்தி, பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து விற்பனை விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், அண்ணா, கருணாநிதியை காட்டிலும் முதல்வர் ஸ்டாலின் கைத்தறித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக புகழாரம் சூட்டினார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கைத்தறித்துறையில் 400 தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் கைத்தறித்துறையில் குஜராத்தை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
கடைசியாக, மக்களை பற்றியே முதலமைச்சர் ஸ்டாலின் சிந்தித்துக் கொண்டிருப்பதால் எங்களை பார்த்தால் கூட அவர் சிரிப்பதில்லை என அமைச்சர் காந்தி கூறியது தான் ஹைலைட்.
முதல்வர் சிரிக்கிறாரா, சிரிப்பதில்லையா என யாரும் கேட்காமலேயே அவருக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கும் வகையில் பேசி அதற்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார் அமைச்சர் காந்தி.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications