சேலம் அருகே தம்பதிக்கு எமனாக மாறிய பாலத்தின் தடுப்பு சுவர்.. நொடியில் பெற்றோரை இழந்த குழந்தைகள்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மாசிலாபாளையம் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் பந்தல் அமைக்கும் தொழிலாளியாவார். இவருயை மனைவி ஜமுனாவிற்கு 32 வயது ஆகிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று கணவன்-மனைவி 2 பேரும் ஸ்கூட்டரில் கொளத்தூரில் இருந்து சென்னம்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, யாருமே எதிர்பார்க்காத சம்பவம் நடந்துள்ளது. பாலத்தின் தடுப்பு சுவர் எமனாக மாறி உள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மாசிலாபாளையம் என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயதாகும் வசந்தகுமார் பந்தல் அமைக்கும் தொழிலாளியாவார். இவருடைய மனைவி ஜமுனாக்கு 32 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு சஜித் (12), அஸ்விந்த் (9) ஆகிய மகன்கள் உள்ளனர். இதனிடையே நேற்று கணவன்-மனைவி 2 பேரும் ஸ்கூட்டரில் கொளத்தூரில் இருந்து சென்னம்பட்டி ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர்.

The retaining wall of a bridge near Salem became a yaman for a couple

மோலப்பாறையூர் அருகே அவர்கள் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் அங்கிருந்த தரைப்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியிருக்கிறது. இந்த விபத்தில் கணவன்-மனைவி 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வசந்தகுமார், ஜமுனா ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அங்கு பெற்றோரை இழந்த 2 குழந்தைகளையும் உறவினர்களுடன் சேர்ந்தது அழுதது காண்போரை கலங்க வைத்தது.

வேலூர் ரயில்வே மேம்பாலம்

வேலூர் அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி இளைஞர் உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விஷோர் என்ற இளைஞர், சென்னையில் உள்ள தனியார் செல்போன் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவரது உறவினர் மகன் சென்னை பூந்தமல்லியில் இன்ஜினியரிங் படித்து வந்தார். இருவரும் பள்ளிக்கொண்டாவில் நடைபெறும் திருமணத்திற்காக வந்துள்ளனர்.

The retaining wall of a bridge near Salem became a yaman for a couple

குடியாத்தம் அடுத்த ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பாலத்தின் கைப்பிடிச்சுவரில் மோதி அங்கிருந்து கீழே விழுந்தது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் கிஷோர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. முகுந்த்கிரிஷுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+