சேலம் ஓமலூரில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து.. 3 பேர் உடல் சிதறி உயிரிழப்பு
சேலம்: சேலம் அடுத்துள்ள ஓமலூரில் உள்ள புகழ்பெற்ற திரௌபதி அம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. கோயில் திருவிழாவுக்காகப் பட்டாசுகள் எடுத்துச் செல்லப்பட்டபோது எதிர்பாராத விதமாக அது வெடித்துச் சிதறியுள்ளது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பட்டாசுகளை நாம் மிகக் கவனமாகக் கையாள வேண்டும். சற்று அலட்சியமாக இருந்தாலும் பெரிய விபத்து ஏற்பட்டுவிடும். பட்டாசுகள் நொடியில் மிகப் பெரியளவில் வெடித்துச் சிதறும் ஆபத்து இருப்பதே இதற்குக் காரணம்.

வெடி விபத்து
அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் இப்போது சேலத்தில் நடந்துள்ளது. அங்கு அம்மன் கோயில் விழாவின் போது திடீரெனப் பட்டாசுகளால் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பூசாரிப்பட்டி அடுத்துள்ள கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. உள்ளூரில் மிகவும் பிரசக்தி பெற்ற இந்தக் கோயில் திருவிழா நடந்து வருகிறது. அம்மன் கோயில் திருவிழாவுக்காகப் பட்டாசுகள் என வாணவேடிக்கைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
வெடித்துச் சிதறியது
எனவே, திருவிழாவுக்குத் தேவையான பட்டாசுகளை டூவிலரில் எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது அந்தச் சாலையில் குப்பை எரிந்து கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வழியாகச் சென்ற டூவிலர் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், தீயில் விழுந்துள்ளது. அப்போது அதில் இருந்த பட்டாசுகள் உடனடியாக தீப்பிடித்து வெடித்துச் சிதறியுள்ளது.
மூன்று பேர் பலி
எதிர்பார்க்காத நேரத்தில் நடந்த இந்த விபத்தால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தால் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் கஞ்சநாயக்கன்பட்டி கோட்டை மேட்டை சேர்ந்த செல்வராஜ் (29) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்த மற்ற இருவரை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களில் ஒரு குழந்தையும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பலர் படுகாயம்
மேலும், இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் சம்பவம் தொடர்பாக ஓமலூர் டிஎஸ்பி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழா நேரத்தில் நடந்த தீவிபத்து அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications