பயங்கர சப்தம்.. படீரென வெடித்த ரேடியோ.. விவசாயி பலி.. சிறுமி உயிர் ஊசல்.. 3 பேர் படுகாயம்
ரேடியோ வெடித்து விவசாயி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை தந்துள்ளது
சேலம்: இப்படி ஒரு கொடுமை இதற்கு முன்பு நடந்திருக்குமா தெரியவில்லை.. ரேடியா வெடித்ததில், உடல் சிதறி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.. 3 பேர் காயமடைந்துள்ளனர்.. அதில் 12 வயது சிறுமிக்கு உயிர் ஊசலாடுகிறது!
சேலம் பனமரத்துப்பட்டி அருகே உள்ளது தும்பல்பட்டி என்ற பகுதி.. இங்கு வசித்து வந்தவர் மணி.. இவர் ஒரு விவசாயி.. 50 வயதாகிறது.. சம்பவத்தன்று இரவு இவர் வீட்டு வாசலில் ஒரு ரேடியோ பெட்டி விழுந்து கிடந்தது. இதைப் பார்த்த மணி, அந்த ரேடியா யாருடையது என்று தெரியாமல் எடுத்து கொண்டு போய் வீட்டில் வைத்திருந்தார்.
பிறகு மறுநாள் அந்த ரேடியா வேலை செய்கிறதா என செக் பண்ணினார்.. அதற்காக கரண்ட் கனெக்ஷன் தந்து இயக்க செய்தார். அப்போதுதான் திடீரென அந்த ரேடியோ பெட்டி வெடித்து சிதறியது. இதில் முகம், தலை, நெஞ்சு பகுதி என உடம்பெல்லாம் பலத்த காயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே துடிதடித்து உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில், 12 வயது சிறுமி செளரூபியா, வசந்தகுமார் 37, நடேசன் 67, ஆகியோர் பலத்த காயமடைந்தனர்... இவர்கள் 3 பேரையுமே உடனடியாக மீட்டு அக்கம்பக்கத்தினர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. இதில் செளரூபியா உடல்நிலை ரொம்ப மோசமாக உள்ளதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். எனினும் தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.
இதுதொடர்பாக பனமரத்துப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்... உண்மையிலேயே வெடித்து சிதறிய பொருள் என்ன? ரேடியோ பெட்டி எப்படி வெடிக்கும்? யார் இதை கொண்டு வந்து மணி வீட்டின் அருகில் போட்டுவிட்டு போனார்கள் என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது.
தடயவியல் நிபுணர்களும் வெடிகுண்டு நிபுணர்கள் இதை பற்றி பரிசோதித்தும் வருகிறார்கள்.. ரேடியோ வெடித்து ஒருவர் பலியான சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications