நானும் வர்றேன்.. எடப்பாடியும் வரட்டும்.. கிராமத்துக்கு போறோம்.. உதயநிதி ஸ்டாலின் சவால்!
சேலம் பிரச்சாரத்தில் முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டுள்ளார்.
Recommended Video

சேலம்: "கலைஞர் பேரன் நான் வர்றேன்.. எடப்பாடியும் வரட்டும்.. ரெண்டு பேரும் தமிழ்நாட்டில ஏதாவது ஒரு கிராமத்திற்கு போறோம்.. ஜனங்க யார் கிட்ட வர்றாங்க.. யார் கிட்ட தங்கள் குறைகளை சொல்றாங்கன்னு பார்ப்போமா?" முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
சேலம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் மல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் அவர் பேசும்போது சொன்னதாவது:
இந்தியாவின் வில்லன் யார் தெரியுமா? மோடிதான். மோடியின் கைக்கூலிகள் ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும்! அன்புமணி தான் காமெடியன்.

கவுன்சிலர்
ஏன்னா, எடப்பாடி பழனிசாமியை ஒரு கவுன்சிலர் ஆவதற்கு கூட தகுதி இல்லாதவர்-ன்னு அன்னைக்கு சொல்லிட்டு, இன்னைக்கு அங்கேயே கூட்டணி அமைத்துள்ளார்.

பாதுகாப்பு இல்லை
அதிமுக கூட்டணி ஒரு வெட்கம் கெட்ட கூட்டணி. இங்க பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை . 2 நாட்களுக்கு முன்பு கூட கோயம்புத்தூர்ல 7 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டுள்ளாள். பொள்ளாச்சி சம்பவமும் அப்படியேதான். பெண்களுக்கு ஒரு பாதுகாப்பும் இல்லை என்பதைதான் காட்டுகிறது.

எடப்பாடி வரட்டும்
தமிழகத்தில் நடப்பது ஒரு சோதனையான ஆட்சி. கலைஞர் பேரன் நான் வருகிறேன், எடப்பாடியும் வரட்டும் ரெண்டு பேரும் தமிழகத்தின் ஒரு கிராமத்திற்கு செல்கிறோம்.. யாரை நெருங்கி மக்கள் குறைகளை சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

மோசடி ஆட்சி
இது மோடி ஆட்சி இல்லை.. மோசடி ஆட்சி.. அதனால மோடி ஆட்சியையும் வெட்கம்கெட்ட ஓபிஎஸ், இபிஎஸ் ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது" என்று பேசினார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications