வானதி சீனிவாசன் மகன் கார் விபத்தில் சிக்கினார்.. நள்ளிரவு சேலம் மேம்பாலத்தில் நடந்த ஷாக் சம்பவம்
வானதி சீனிவாசன் மகன் கார் விபத்தில் சிக்கினார்
சேலம்: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் மகன் சென்ற கார், சேலம் மேம்பால தடுப்பு சுவர் மீது மோதி, தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது... இதில் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்களுமின்றி அவர் உயிர் தப்பினார்.
தேசிய அளவில் பாஜகவின் முக்கிய பொறுப்பை வகித்து வரும் வானதி சீனிவாசன், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மநீம தலைவர் கமலை தோற்கடித்து எம்எல்ஏவானார்.
Recommended Video
வானதி சீனிவாசனுக்குக்கு ஆதர்ஸ், கைலாஸ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.. இதில் ஆதர்ஷ், கோயமுத்தூர் பிஎஸ்ஜி கல்லூரியில் மாணவர் பேரவை தலைவராக சமீபத்தில்தான் தேர்வு செய்யப்பட்டிருந்தார்..

ட்வீட்
இதற்கான போட்டோவையும் வானதி சீனிவாசன் தன்னுடைய ட்வீட்டில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் ஆதர்ஷ் கார் விபத்தில் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. நேற்று நள்ளிரவு கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு கார் மூலமாக சென்று கொண்டிருந்தார் ஆதர்ஷ்.. ந்தார் ஆதர்ஷ்..

விபத்து
அப்போது கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள பட்டர்பிளை மேம்பாலத்தின் வழியாக அதிவேகமாக வந்துபோது, மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார் வேகமாக வந்து மோதியுள்ளது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தாறுமாறாக ஓடி, அங்கேயே தலைகீழாக கவிழ்ந்துவிட்டது.. பிறகு, கவிழ்ந்த நிலையிலேயே சிறிது தூரத்துக்கு இழுத்தும் செல்லப்பட்டது.. ஆனால், ஆதர்ஷ் அதிர்ட்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.. எனினும், கார் முற்றிலும் சேதமடைந்துவிட்டது.. இந்த விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது...

விசாரணை
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ஆதர்சை காருக்குள்ளிருந்து பத்திரமாக மீட்டனர்... அதன்பிறகு நடைபெற்ற விசாரணையில் தான் விபத்தில் சிக்கிய ஆதர்ஷ், வானதி சீனிவாசனுடைய மகன் என்பது போலீஸாருக்கு தெரிய வந்திருக்கிறது.. இந்த விபத்து நடந்த உடனேயே ஆதர்ஷ், அவருடைய அம்மா வானதி சீனிவாசனுக்கு போனில் தகவலை சொல்லியிருக்கிறார். உடனே வானதியும், சேலத்தில் இருந்த பாஜக நிர்வாகிகளை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

பாஜக நிர்வாகிகள்
இதையடுத்து, பாஜக நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.. சேலத்திலுள்ள கே.என்.ராவ் மருத்துவமனைக்கு ஆதர்ஷை அழைத்து சென்ற பாஜகவினர், அங்கு பரிசோதனையில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிந்தபிறகு வேறொரு காரை வரவழைத்து சென்னைக்கு ஆதர்ஷை அனுப்பி வைத்துள்ளனர்.

மீட்பு
பின்னர் விபத்துக்குள்ளான கார் சாலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ!












Click it and Unblock the Notifications