கோயிலில் பொட்டு வைத்து கொண்டு.. எல்லாம் நாடகம்.. திருமாவை புறக்கணியுங்க.. வேலூர் இப்ராஹிம் அட்டாக்!
திருமாவளவனை சரமாரி குற்றஞ்சாட்டினார் வேலூர் இப்ராஹிம்
சேலம்: "கோயில் சிலைகளை பற்றி பேசும்போது ஆபாசமாக இருக்கிறது.. அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது என்று பல்வேறு வகையில் இந்துக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி வந்த திருமாவளவன், இப்போது தேர்தல் நெருங்குவதால், சிதம்பரம் கோவிலில் போய் பொட்டு வைத்துக்கொண்டு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்" என்று வேலூர் இப்ராஹிம் விமர்சித்து உள்ளார்.
சேலம் கோரிமேடு பகுதியில், தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசும்போது முழுக்க முழுக்க விசிக தலைவர் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்தும், அவரை விமர்சித்தும் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இப்ராஹிம் சொன்னதாவது: "தமிழகத்தில் உள்ள தமிழக முஸ்லிம்களை தவறான முறையில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களின் மூலமாக வன்முறையும் மூலமாக கொண்டு செல்வதற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற தமுமுக என்ற அமைப்பு, எஸ்டிபிஐ பிஎஃபை போன்றவர்கள் திட்டமிட்டு காய் நகர்த்துகிறார்கள். அவர்களால் இந்த சமூக நல்லிணக்கத்திற்கும் மத நல்லிணக்கத்திற்கு மிகப்பெரிய கேடாக இருக்கிறது.. இது போன்ற அமைப்புகளை தடுக்க வேண்டும்.
வேல் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி கொண்டிருக்கிறார் திருமாவளவன்.. கடந்த காலங்களில் இந்துமத வழிபாட்டுத் தலத்தில் இருக்கக்கூடிய சிலைகளை பற்றிப் பேசும்போது ஆபாசமாக இருக்கிறது, அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது என்று பல்வேறு வகையில் இந்துக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி வந்தவர், இப்போது தேர்தல் நெருங்கும் காலமென்பதால் சிதம்பரம் கோவிலில் போய் பொட்டு வைத்துக்கொண்டு அந்த நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.
தமிழக முஸ்லிம்கள் இவர் பின்னால் செல்வது என்பது ஆபத்தானது.. இஸ்லாமிய மக்கள் நிச்சயமாக புரிந்துகொள்வார்கள்.. திருமாவளவன் என்ற தீய சக்தியை வரக்கூடிய தேர்தலில் தமிழகத்தில் தமிழக மக்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய அடுத்த கட்ட பிரச்சாரமாக அமையும்" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications