தேர்தலுக்கு முன்னாடி இதை அறிவிக்கலைனா திமுக கூட்டணிக்கு பெரிய அடி.. வார்னிங் கொடுக்கும் வேல்முருகன்!
சேலம்: நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழக முதல்வர் இதனை அறிவிக்கவில்லை என்றால் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டார். இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், தமிழ்நாடு அரசு பணிகள் அனைத்தும் தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன் பேசும்போது, "இன்று நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் உட்கட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாத காலங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அனைத்து நிலை பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. கட்சிக்கான புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, பிப்ரவரி 28ஆம் தேதி கடலூரில் கோரிக்கை மாநாடு நடத்த இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகளை முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவிக்கவில்லை என்றால் தேர்தலில் திமுக தலைமையிலான வெற்றி கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும். சமூகநீதி பேசும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்.
திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் அவர்கள் எங்களுக்கு கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும். இல்லையென்றால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகளை அறிவிப்போம்." எனத் தெரிவித்தார்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தற்போது பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற வேல்முருகன், பல்வேறு விவகாரங்களில் திமுக அரசை விமர்சித்து வருகிறார். இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்திலும் திமுகவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
-
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications