விஜயை உரிச்சு வச்ச மாதிரி..’மாம்பழ’ நகரில் மாஸ் என்ட்ரி கொடுத்த ஜேசன் சஞ்சய்! சிஎம் வந்துருக்காரே..!
சேலம்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் ஒரே விமான நிலையத்தில் சேலம் வருகை தந்துள்ளனர். இதுவரை பொது நிகழ்ச்சிகளில் அதிகம் தென்படாத ஜேசன் சஞ்சய் முதன்முறையாக சேலம் வந்துள்ளார். தமிழகத்தின் ஒட்டுமொத்த விஐபிகளும் எதற்காக சேலம் வந்துள்ளார்கள் என்பதுதான் ஹாட் டாபிக்.
தமிழ் திரை உலகில் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் விஜய் அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து தீவிர அரசியலில் ஈடுபட்டிருக்கிறார். அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.

வேட்டைக்காரன் படத்தில் 'நான் அடிச்சா தாங்க மாட்ட' பாடலில் நடனமாடிய அவர் அதற்குப் பிறகு நாயகன் அவதாரம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் சென்று இயக்குனர் படிப்பை முடித்திருக்கும் அவர் இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார்.
பிரம்மாண்ட படங்களை தயாரிக்கும் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் அவரது முதல் படத்தை தயாரிக்கிறது. பிரபல நடிகர் சந்திப் கிஷன் நடிக்க லைக்கா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். பேன் இந்தியா திரைப்படமாக இந்த படம் உருவாகிறது. படத்தின் அறிவிப்பு வந்த பிறகு எந்தவித அப்டேட்டும் இல்லாததால் படத்தை கைவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் படம் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் தாண்டி விட்டதாகவும், அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் முதன் முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து இருக்கிறார் ஜேசன். இன்று நண்பகலில் சேலம் விமான நிலையத்தில் என்ட்ரி கொடுத்தார். முதலமைச்சர் மு,க,ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருடன் ஜேசன் சஞ்சய் ஒரே விமானத்தில் பயணித்து சேலம் வந்திறங்கினார். திடீரென அவரை பார்த்து அடையாளம் கண்டு கொண்ட ரசிகர்கள் அவரை புகைப்படம் எடுத்தனர்.
இதை அடுத்து காரில் ஏறி அவர் புறப்பட்டுச் சென்றார். ஒரே விமானத்தில் எத்தனை விஐபிகள் எதற்காக வந்தார்கள் என சமூக வலைதளங்களிலும் தேடல் தொடங்கியது. இந்த நிலையில் தான் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர்கள் சேலம் வந்திருப்பது தெரிய வந்துள்ளது. பாமக முன்னாள் தலைவரும் தற்போதைய கௌரவ தலைவரும், எம்எல்ஏவும் ஆன ஜிகே மணியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்கத்தான் விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் ஆன விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், விஜய் சேதுபதி ஆகியோர் வந்திருக்கின்றனர்.
தொடர்ந்து அவர்களை ஜி.கே.மணியின் உறவினர்கள் அழைத்துச் சென்றனர். ஜிகே மணியின் இல்ல திருமண விழாவில் ஜேசன் சஞ்சய் கலந்து கொள்ள என்ன காரணம் என பல்வேறு யூகங்கள் இறக்கை கட்டி பறந்தது. ஆனால் முழுக்க முழுக்க சினிமா தொடர்பாக மட்டுமே ஜேசன் சஞ்சய் அந்த திருமண விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் ஜிகே மணியின் மகனான ஜிகேஎம் தமிழ்குமரன் இருக்கிறார். அவர்தான் தயாரிப்பு நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கவனித்துக் கொள்கிறார்.
விஜயின் மகனை இயக்குனராக அறிமுகப்படுத்துவதில் லைக்காவின் முயற்சிகளுக்கு ஜிகேஎம் தமிழ் குமரன் ஒரு முக்கிய காரணம். அந்த அடிப்படையில் தான் ஜேசன் சஞ்சய் அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். ஜிகேஎம் தமிழ்குமரன் பாமக இளைஞரணி தலைவராக நியமனம் செய்யப்பட்டு அதற்கு பிறகு கடும் எதிர்ப்பு காரணமாக பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications