மேட்டூர் அணை நீர்மட்டம்...கிடு கிடு உயர்வு...86.9 அடியாக உயர்ந்தது!!
மேட்டூர்: காவிரி ஆற்றில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் 86.9 அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு அதிகளவில் நீர் திறந்து விடப்பட்டு இருப்பதால், தமிழகத்துக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.
Recommended Video
கபினி, கிருஷ்ணராஜ சாகா் ஆகிய அணைகளுக்கு வரும் மழைநீா் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,50,000 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து 45,000 கன அடியாக இருந்தது. இது இதற்கு முந்தைய வியாழக் கிழமையில் வெறும் 6,000 கன அடியாக இருந்தது. தற்போது 90,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.830 ஆக இருந்தது. இது தற்போது 86.9 அடியாக அதிகரித்துள்ளது. அணையின் மொத்த நீர் கொள்ளளவு 120 அடியாகும். மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட நீரின் அளவு 2.3 லட்சம் கன அடியாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் தருமபுரி மாவட்டம் பிலிகுண்ட்லுவுக்கு வந்த நீரின் அளவு 1.50 லட்சம் கன அடியாக இருந்தது.
இன்றைய காலை நிலவரம் கர்நாடகாவிலிருந்து 92 ஆயிரத்து 852 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. தற்பொழுது கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவானது சற்று குறைக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications