சேலம் கலைவாணி வீட்டிற்கு வந்த மந்திரவாதி.. தீவிரமாக நடந்த பூஜை.. இறுதியில் ட்விஸ்ட்
சேலம்: சேலம் கொண்டலாம்பட்டியில் கலைவாணி என்பவரது வீட்டிற்கு மந்திரவாதி எனக்கூறிக்கொண்டு ஒருவர் வந்துள்ளார். குடும்பத்தில் கஷ்டங்கள் இருக்கிறது. வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதால் அதை சரி செய்ய வேண்டும் என்றால் வீட்டில் மாந்திரீக பூஜை செய்ய வேண்டும் என்று மந்திரவாதி கூறியுள்ளார். இதை நம்பி பூஜை செய்த பெண்ணுக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி மிசின் கிணறு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவர்கொண்டலாம்பட்டியில் உள்ள ஒரு பட்டு கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கலைவாணி (வயது 30). நேற்று காலை வழக்கம் போல் மாணிக்கம் வேலைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். வீட்டில் கலைவாணி மட்டும் தனியாக இருந்திருக்கிறார். அப்போது, அவரது வீட்டிற்கு மந்திரவாதி என்று கூறிக்கொண்டு ஒருவர் வந்துள்ளாராம்.

பின்னர் அவர் கலைவாணியிடம் குடும்பத்தில் கஷ்டங்கள் இருப்பதாக கூறியிருக்கிறார். வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதால் அதை சரி செய்ய வேண்டும் என்று கூறினாராம். அதற்கு வீட்டில் மாந்திரீக பூஜை செய்ய வேண்டும் என்றும் மந்திரவாதி என்று கூறினாராம். இதனை உண்மை என்று நம்பிய கலைவாணியும், பூஜை செய்வதற்கு ஒப்புக்கொண்டு அந்த நபரை வீட்டுக்குள் வரவழைத்து பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அபோது, ஒரு சொம்பில் நிறைய தண்ணீர் நிரப்பி அதற்குள் ஒரு எலுமிச்சம் பழத்தை போட்டு கற்பூரம் ஏற்றி அந்த நபர் பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது. அதன்பிறகு அவர் கலைவாணியிடம் உனது கழுத்தில் உள்ள தாலி சங்கிலியை கழற்றி சொம்புக்குள் போட்டால் உங்களுக்கு எந்தவித நோய் நொடியும் வராது என்று தெரிவித்துள்ளார். அதனை நம்பிய கலைவாணி கழுத்தில் இருந்த 3.5 பவுன் தாலி சங்கிலியை கழற்றி போட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து பூஜை செய்துவிட்டு கை கால்களை அந்த நபர் கழுவிக்கொண்டு அந்த சொம்பை எடுத்து வீட்டிற்குள் வைக்க வேண்டும் என்று கூறினாராம். உடனே கை, கால்களை கலைவாணி கழுவுவதற்கு சென்றபோது சொம்புக்குள் இருந்த தாலி சங்கிலியை எடுத்துக்கொண்டு அந்த மர்ம நபர் வீட்டில் இருந்து வெளியேறி தப்பிச்சென்றிருக்கிறார்.
கலைவாணி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டிற்குள் இருந்த அந்த நபர் எஸ்கேப் ஆகியிருந்தார். போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகு தான் மர்ம நபர் நகையை அபேஸ் செய்து திருடிச்சென்றது தெரியவந்தது.
இந்த மோசடி குறித்து கலைவாணி கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவு போலீசில் புகார் கூறினார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலி சங்கிலியை பூஜை என்ற பெயரில் அபேஸ் செய்து விட்டு தப்பிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!











Click it and Unblock the Notifications