சேலம் அருகே ஓடும் ரயிலில் பெண் சாப்ட்வேர் என்ஜினியரிடம் அத்துமீறல்.. ஜவுளிக்கடை உரிமையாளர் கைது
சேலம்: ஈரோட்டை சேர்ந்த 24 வயதுடைய பெண் சாப்ட்வேர் என்ஜினியரிடம் ஒருவர் பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் மும்பையில் இருந்து கோவை செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி வந்துள்ளார். சேலம் அருகே வந்து கொண்டிருந்த போது ஓடும் ரயிலில் என்ஜினியரிடம் அத்துமீற முயன்ராம். இந்த புகாரில் ஜவுளிக்கடை உரிமையாளரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
ரயிலில் செல்லும் போது, பேருந்தில்செல்லும் போது, பெண்களை இடிப்பதற்கு என்றே சிலர் சுற்றுவார்கள்.. அதேநேரம் சிலர் சில்மிஷத்திலும் ஈடுபடுவது உண்டு. கேட்டால் தெரியாமல் கைப்பட்டு விட்டது. கால் பட்டுவிட்டது என்று கூறுவார்கள். சிலர் பின்னால் நின்று மிக கேவலமான செயல்களில் ஈடுபடுவதும் உண்டு. இன்னும் சிலர் ரயில்களில் தூங்கி கொண்டிருக்கும் பெண்ணிடம் கையை விட்டு அத்துமீற முயற்சிப்பதும் நடக்கும்.. அப்படியான ஒரு சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

ஈரோட்டை சேர்ந்த 24 வயதுடைய பெண் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த அக்டோபர் 7ம் தேதி இரவு , பெங்களூரில் இருந்து ஈரோடு செல்ல முடிவு செய்தார். இதையடுத்து சொந்த ஊருக்கு செல்வதற்காக மும்பையில் இருந்து கோவை செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.
இந்த ரயில் நேற்று அதிகாலை சேலம் அருகே வந்து கொண்டிருந்தது. அதே பெட்டியில் பயணம் செய்த மர்ம நபர் ஒருவர் திடீரென தூங்கி கொண்டிருந்த அந்த பெண் என்ஜினியரிடம் சில்மிஷடத்தில் ஈடுபட்டு அத்துமீற முயன்றாராம். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் கூச்சலிட்டார். உடனே அந்த பெட்டியில் பயணம் செய்த சக பயணிகள், இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அந்த மர்ம நபரை மடக்கி பிடித்தார்கள்.
பின்னர் இதுகுறித்து சேலம் ரயில்வே போலீசாருக்கு உடனடியாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே ரயில் அதிகாலை 4 மணியளவில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது ஏற்கனவே அங்கு தயாராக இருந்த ரயில்வே போலீசார், இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மர்ம நபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் அவர், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள கண்டிகை பகுதியை சேர்ந்த 46 வயதாகும் சங்கர் என்பதும், சித்தூரில் ஜவுளிக்கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. மேலும் அவர் துணிகள் வாங்குவதற்காக ஈரோட்டுக்கு வந்ததும் தெரிந்தது. இதையடுத்து சங்கரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் ரெயிலில் பெண் என்ஜினியரிடம் சில்மிஷம் செய்த ஜவுளிக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications