ஏற்காடு பஸ் விபத்தில் 6 பேர் பலி, 64 பேரின் நிலை என்ன? சேலம் மருத்துவமனை டீன் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர். மீதமுள்ள பயணிகள் நிலை குறித்து சேலம் அரசு மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கோடைவெயில் உச்சத்தில் இருக்கிறது. பலரும் கேடைவாசல் தலங்களை நோக்கி பயணிக்கிறார்கள். 'ஏழைகளின் ஊட்டி' என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு பலரும் பயணித்து வருகிறார்கள். இந்நிலையில் சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு தினசரி தனியார் பேருந்து ஒன்று சென்று வருகிறது. இந்த தனியார் பஸ் சேலத்திற்கு நேற்று மாலை 5.30 மணியளவில் புறப்பட்டது.

What is the status of 64 people in the bus accident on Yercaud Hill Salem Hospital Dean Interview

இந்த பஸ்சில் சுற்றுலா பயணிகள், கூலி வேலைக்கு சென்றவர்கள் சுமார் 70 பேருக்கு மேல் இருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், பஸ்சை ஏற்காடு வாழவந்தி பகுதியை சேர்ந்த 30 வயதாகும் மணி என்பவர் ஓட்டி வந்தார். 13-வது கொண்டை ஊசி வளைவில் சென்ற போத போது பஸ்சை வளைவில் டிரைவர் திருப்ப முயன்று உள்ளார். அப்போது பஸ்சின் அச்சு முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் காட்டுப்பகுதியில் பள்ளத்தில் தாறுமாறாக பாய்ந்தது.

13-வது கொண்டை ஊசி வளைவில் இருந்த பஸ், சுமார் 80 அடி உயரத்திற்கு கீழே வந்த நிலையில், 11-வது கொண்டை ஊசி வளைவில் வந்து சாலையோரம் இருந்த ஒரு மரத்தில் மோதி நின்றது. பஸ் பள்ளத்தில் பாய்ந்து வந்த போது, பயணிகள் 'அய்யோ, அம்மா காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' என்று கூச்சலிட்டார்கள்.மரத்தில் பஸ் மோதி நின்ற போது, சம்பவ இடத்திலேயே ஒரு சிறுவன் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். திருச்செங்கோட்டைச் சேர்ந்த 10 வயது சிறுவன் மூனீஸ்வரன், சேலத்தை சேர்ந்த கார்த்தி, ஹரிராம், மாது ஆகிய 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

பஸ்ஸில் பயணித் 64க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அவ்வழியாக சென்ற சுற்றுலாப் பயணிகள் ஆம்புலன்சுக்காக காத்திருக்காமல் தங்களது சொந்த வாகனங்கள் மற்றும் ஆட்டோ, மினி டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஏற்காடு போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம்பட்டவர்களை மீட்டு ஆம்புலன்சில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயம் அடைந்தவர்களை அரசு மருத்துவமனை ஊழியர்கள் சக்கர நாற்காலிகள் மூலம், ஸ்டெக்சர் மூலமும் விரைந்து அழைத்து சென்றார்கள். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 பேரில் 40 பேர் காயம் அடைந்தனர். இதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 2 பேர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

What is the status of 64 people in the bus accident on Yercaud Hill Salem Hospital Dean Interview

காயம் அடைந்தவர்கள் : குல்தீப் (வயது 34), ஸ்ரீபிரகவன் (27), வெங்கடாஜலம் (45), லட்சுமி (50), வேலம்மாள் (52), சாவித்திரி (50), மகாலட்சுமி (28), ரமேஷ் (40), அரிபிரகாஷ், (17), ராகுல் (18), கணேஷ் (28), பரத்குமார், வளர்மதி (47), ரஞ்சித் (20), முருகேஸ்வரி (31), சதீஷ்குமார் (35), அரிகரன் (11), காளியம்மாள் (52), மேரி ஸ்டெல்லா (59), சீனிவாசன் (19), ஆறுமுகம் (65), திவ்யா (26), மயில்ராஜ் (54), மோகன்ராஜ் (28), தளபதி (60), மற்றொரு மகாலட்சுமி (28), சாந்தி (31), சின்ராஜ் (33), அகிலை (7), பிரியதர்ஷினி (14), லட்சுமி (56),குப்பன் (70), கவுசிக் (18), கந்தசாமி (82), புஷ்பா (46), சுப்ரமணியன் (54), கண்ணா (54), ஷர்மிளா (50), மஸ்தான்( 52), சோலையப்பன் (63), வினோத் (21), ஸ்ரீதர் (25), அஜய் (15), ராசாத்தி (50), செல்வராஜ் (54).

இந்த விபத்து குறித்து சேலம் மருத்துவமனை டீன் நேற்று நள்ளிரவு பேசுகையில், ஏற்காடு மலை பஸ் விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர் (6ஆக உயர்ந்தது). மீதமுள்ள 60க்கும் மேற்பட்ட பயணிகளில் அனைவருமே மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்து தாண்டிவிட்டனர். ஒருவர் மட்டுமே ஆபத்தான நிலையில் இருந்தார். பெரும்பாலான பயணிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை. இங்கு சிகிச்சைக்கு வந்த பயணிகளில் 8 பேர் வேறு மருத்துவமனைக்கு செல்வதாக சென்றுவிட்டனர். மற்ற பயணிகளுக்கு எலும்பு பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. தேவையான சிகிச்சைகளை சிறப்பாக அளித்து வருகிறோம்" இவ்வாறு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+