வேலை எப்போ முடியும்.. ரெய்டு விட்ட ஸ்டாலின்.. பார்த்ததும் கேட்ட "அந்த" கேள்வி.. குட் நியூஸ்

சேலம் , தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இந்த ஆய்வுகள் முதல் கட்டமாக முதல்வர் ஸ்டாலின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

முதல்வர் ஸ்டாலின் தற்போது மண்டல அளவிலான ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். மண்டல அளவில் மாவட்ட நிர்வாகங்கள் எப்படி உள்ளன. மாவட்டங்கள் எப்படி செயல்படுகின்றன.

அரசு திட்டங்கள் எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டு உள்ளன. எந்தெந்த திட்டங்கள் தொடங்காமல் உள்ளன என்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். சேலம் மண்டலத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டு உள்ளார்.

சேலம் மண்டலம்

சேலம் மண்டலம்

சேலம் , தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இந்த ஆய்வுகள் முதல் கட்டமாக முதல்வர் ஸ்டாலின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திட்டங்கள் எப்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சேலத்தில் இரண்டு அடுக்கில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அதாவது வட்டமாக அமைக்கப்படும் பேருந்து நிலையம் இரண்டு அடுக்காக கட்டப்பட்டு வருகிறது. நவீன வசதிகளுடன், புதிய தொழில்நுட்பத்தில் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி

ஸ்மார்ட் சிட்டி

இங்கே அமைக்கப்படும் வணிக வளாகத்தையும் முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். அதன்பின் ஸ்மார்ட் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டவர் உள்ளே மாடிப்படிகள் வழியாக ஏறி சென்றார். ஒவ்வொரு தளமாக சென்று எங்கே என்ன அமைக்கப்படும் என்று கேள்வி எழுப்பினார். வசதிகள் எப்படி இருக்கும் என்று கேட்டார். எங்கெல்லாம் கடைகள் வரும், எந்த பகுதிகளில் மக்கள் ஓய்வு எடுக்க வசதிகள் உள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அதேபோல் மேலடுக்கில் செய்யப்பட உள்ள நவீன வசதிகள், அலங்கார அமைப்புகள் ஆகியவற்றை குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

கேள்வி கேட்டார்

கேள்வி கேட்டார்

இதையடுத்து அதிகாரிகளிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின்.. இதன் பணிகள் எப்போது முடியும். பணிகள் எத்தனை சதவிகிதம் முடிந்துள்ளது. எத்தனை பேருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். லிப்ட் அமைக்கும் பணிகள் எந்த அளவில் இருக்கின்றன என்று விளக்கமாக கேட்டறிந்தார். விரைவில் இதன் பணிகளை முடிக்க வேண்டும். விரைவில் இது மக்கள் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்று அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஸ்மார்ட் சிட்டி சேலம்

ஸ்மார்ட் சிட்டி சேலம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலத்தில் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இரண்டு அடுக்கு கொண்ட பேருந்து நிலையம் ஆகும் இது. ரூ.92 கோடியே 13 லட்சம் செலவில் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. 2018ல் இதற்கான பணிகள் தொடங்கின. இந்த வருடத்திற்குள் இதற்கான பணிகள் முடியும். தற்போது 95 சதவிகித பணிகள் முடிந்து உள்ளன. உள்ளே கடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் முடிந்ததும் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+