"சிக்கல்.. உடனே போகணும்".. சுதாரித்த எடப்பாடி.. அவசரமாக சேலத்திற்கு போனது ஏன்? பரபரப்பு காரணம்!
சேலம்: எடப்பாடி பழனிசாமி திடீரென சேலத்திற்கு சென்றதிற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பிய நிலையில் எதிர்பார்த்தபடியே அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடக்க தொடங்கி உள்ளன. அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்ததும் அணி தாவல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
யாருக்கு ஆதரவாக தீர்ப்பு வருகிறதோ அவர்கள் பக்கம் நிர்வாகிகள் தாவுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே கடந்த 2 நாட்களாக நிர்வாகிகள் ஒவ்வொருவராக அணி மாற தொடங்கி உள்ளனர்.
முக்கியமாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்த நிர்வாகிகள் சிலர் கொஞ்சம் கொஞ்சமாக ஓ பன்னீர்செல்வம் பக்கம் செல்ல தொடங்கி உள்ளனர்,

ஓ பன்னீர்செல்வம்
தற்போது ஓ பன்னீர்செல்வம் பெரியகுளம் வீட்டில் இருக்கிறார். அங்கு இருந்து கொண்டே நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்து வருகிறார். முக்கியமாக எடப்பாடியின் கோட்டையாக விளங்கும் மேற்கு மாவட்டங்களிலும், மத்திய மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் பக்கம் சென்றார். இவர் எடப்பாடியின் தீவிர ஆதரவாளர். திண்டுக்கல் சீனிவாசன் பக்கம் இருந்தவர் தற்போது ஓபிஎஸ் பக்கம் சென்றுள்ளார்.

கோவை பயணம்
அதேபோல் நேற்று கோவையை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஓ பன்னீர்செல்வம் பக்கம் சென்றனர். எடப்பாடி அணியில் இருந்த இவர்கள் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். வரும் நாட்களில் மேலும் இதேபோல் எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள் ஓ பன்னீர்செல்வம் பக்கம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்ட ரீதியாக இதில் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவான நிலை இருப்பதால் நிர்வாகிகள் அவர் பக்கமே செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ பன்னீர்செல்வம்
ஓ பன்னீர்செல்வம் ஆதரவு வைத்தியலிங்கம் போன்றவர்களும் இதைத்தான் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக சேலத்திற்கு சென்றுள்ளார். நேற்று இரவு எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றார். கோவை மற்றும் மற்ற கொங்கு மாவட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக நிர்வாகிகள் ஓ பன்னீர்செல்வம் பக்கம் செல்கிறார்கள். இதை தடுக்க வேண்டும். இப்படியே போனால் கூடாரம் காலியாகிவிடும் என்று எடப்பாடி தரப்பு கருதுவதாக கூறப்படுகிறது.

சிக்கல்
தீர்ப்பு எதிராக வந்தால் நிர்வாகிகள் சோர்வாகிவிட்டனர். இப்படி போனால் நமக்குத்தான் சிக்கல். கோவையிலேயே நிர்வாகிகள் ஓ பன்னீர்செல்வம் கேம்பிற்கு தாவுவது சரியாக இருக்காது என்பதால்தான் இப்போது எடப்பாடி சேலம் சென்று இருக்கிறார் என்கிறார்கள். கொங்கில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்யும் விதமாக அவர் சேலம் சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. நாளை சென்னையில் வழக்கு இருக்கும் போதும் எடப்பாடி நேற்று சேலம் சென்றதற்கு இந்த அணி மாற்றங்கள்தான் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
-
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்?












Click it and Unblock the Notifications