ஒரு ரவுடியை தீர்த்து கட்ட.. களத்தில் 30 ரவுடிகள்.. என்னதான் காரணம்.. விசாரணையில் பகீர் தகவல்கள்
சேலம்: பிரபல ரவுடி செல்லத்துரை கொல்லப்பட்டது ஏன்? கைதான 15 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக் தகவல்கள் வெளியாகின.
சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி செல்லத்துரை (38). கடந்த 22 ஆம் தேதி இரவு ஒரு மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக வார்டு செயலாளர் பழனிச்சாமி, பிரபல ரவுடி சூரி, தண்டி ஜெயக்குமார், சதீஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

10 பேருக்கு தொடர்பு
இந்த படுகொலைக்கு அதே ஊரைச் சேர்ந்த ஜான் (எ) சாணக்கியன்தான் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவர் உள்பட 15 பேர் கரூர் நீதிமன்றத்திலும் நாமக்கல் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். ஏற்கெனவே 4 பேர் கைதாகிவிட்டனர். மேலும் 15 பேர் சரணடைந்தனர். இவர்கள் இல்லாமல் மேலும் ஒரு 10 பேருக்கு தொடர்பிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

பகீர் தகவல்கள்
ஒருவரை கொல்ல இத்தனை பேர் ஈடுபட்டது ஏன் என போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் பகீர் தகவல்கள் வெளியாகின. கொலை செய்யப்பட்ட செல்லத்துரைக்கு உள்ளூரில் எதிரிகள் அதிகமானோர் இருந்தனர். இதனால் எப்போது கேப் கிடைத்தாலும் எதிர் தரப்பு ரவுடிகளை போட்டு தள்ளிக் கொண்டிருந்தார் செல்லத்துரை.

எதிர்ப்பு
இதனால் சூரி, ஜான் (இவர் செல்லத்துரை வலது கரமாக இருந்தவர்) உள்ளிட்டோர் செல்லத்துரையை போட்டு தள்ள நாளை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஜான் டிக்டார் செயலியில் அறிமுகமான ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு நெருங்கிப் பழகினார். ஆனால் அவரை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை ஜான் திருமணம் செய்து கொண்டார். இதற்கு செல்லத்துரை எதிர்த்தார்.

10 லட்சம்
மேலும் அந்த பெண்ணை ஜான் மீது புகார் கொடுக்குமாறும் செல்லத்துரை தூண்டிவிட்டுள்ளார். இதனால் மோதல் ஏற்பட்டு செல்லத்துரையை விட்டு பிரிந்து நிரந்தர எதிரியானார் ஜான். இதனால் செல்லத்துரையை தீர்த்து கட்ட சூரியுடன் இணைந்து வேலூர் ரவுடி வசூர் ராஜாவுக்கு ரூ 10 லட்சம் கொடுப்பதாக பேசி பணத்தை கொடுத்துள்ளனர்.

48 வழக்குகள்
ராஜாவும் செல்லத்துரையை போனில் மிரட்டினார். ஆனால் இதுகுறித்து பெரிதாக எடுத்துக் கொள்ளாத செல்லத்துரையை படுகொலை செய்தனர். இந்த வசூர் ராஜாவை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர். இவர் மீது செல்லத்துரை வழக்குடன் சேர்த்து 48 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பெங்களூரில் தலைமறைவு
பொதுவாக நேரடியாக செயலில் இறங்காத வசூர் ராஜா, தனது ஆட்கள் மூலமே காரியத்தை சாதித்து வந்தார். அவர் பெங்களூரில் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து பெங்களூருக்கு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications