சென்னை ஆழ்வார்பேட்டையில் ஜி.கே.வாசன்.. சேலத்தில் தமாகா யுவராஜ்! எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ஏன்?
சேலம்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜ், சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார். இது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோல்வி அடைந்ததாக அக்கட்சி நிர்வாகிகளே கூறி வந்தனர். மேலும் நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட விவகாரங்களில் பாஜக மீது மக்கள் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

அப்படிப்பட்ட சூழலில் இனியும் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவின் அரசியல் அஸ்தமனமாகிவிடும் என மூத்த நிர்வாகிகள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுரை வழங்கியதாக தெரிகிறது. இதையடுத்து அவர் சுதாரித்துக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டார்.
தமிழ் மாநில காங்கிரஸ்: அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக தமாகா தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்திருந்தார். மேலும் அவர் ஏன் பாஜகவை தேர்வு செய்தார் என்பதற்கான விளக்கத்தையும் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜ் சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார்.
சலசலப்பு: இது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தனது சந்திப்பு குறித்து யுவராஜ் விளக்கியுள்ளார். அவர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாகவே சந்தித்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் கள நிலவரங்களை பார்த்தால் இவர்களது சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
அதாவது பாஜகவுடன் கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்த போதும் தமாகா தோல்வியை சந்தித்தது. அது போல் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போதும் தமாகாவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டும் அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்தது.
இதனால் இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தமாகாவில் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் அதில் நிர்வாகிகள் பலர் அதிமுகவுடன் கூட்டணி போகலாம் என சொன்னதாகவும் பாஜகவுடன் செல்ல எதிர்ப்பு அதிகரித்ததாகவும் தெரிகிறது. எனினும் ஜி.கே.வாசன் எதிர்ப்புகளை எல்லாம் மீறி பாஜகவுடன் கூட்டணி என அறிவித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை: இது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு அதிருப்தி ஏற்பட்டதாக தெரிகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கிய ஜி.கே. மூப்பனார் எந்த சூழலிலும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என அவருடைய தேர்தல் கள நிலவரங்கள் சொல்கின்றன. மூத்த நிர்வாகிகளும் அதையேதான் விரும்புகிறார்கள். ஜி.கே. வாசன் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.
சூடாகும் தேர்தல் களம்: எனவே அக்கட்சியிலிருந்து மூத்த நிர்வாகிகள் பலர் அதிமுகவில் இணையலாம் என மூத்த பத்திரிகையாளர்கள் கூறி வருகிறார்கள். அதற்கு முத்தாய்ப்பாக எடப்பாடி பழனிசாமியை யுவராஜ் சந்தித்தது அக்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தமாகா அதிமுக கூட்டணியோடு இணைந்து பல தேர்தல்கள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு பிரச்சினைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுதோம்.
அதற்கு மேலாக நல்ல நட்போடு அரசியல் பணியாற்றி வந்தோம். தலைவர் ஜிசே வாசன் பாஜகவுடன் கூட்டணி என பத்திரிகையாளர்களை சந்தித்து அறிவித்துள்ளார்கள். பெருந்தலைவர் காமராசர், மக்கள் தலைவர் மூப்பனார் இவர்கள் வழியில் அரசியல் பயின்றவன் என்ற காரணத்தினால் நான் மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக தனிப்பட்ட முறையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றியை தெரிவித்துவிட்டு வந்துள்ளேன். இவ்வாறு யுவராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications