கல்யாணமாகி ஒரு வாரம்தான் ஆச்சு.. ஹனிமூனும் முடிஞ்சாச்சு.. கணவரை ஸ்டேஷனுக்கு இழுத்து வந்த மனைவி!
சாதியை சொல்லி திட்டியதால் கணவன் மீது மனைவி புகார் அளித்துள்ளார்
Recommended Video
சேலம்: கல்யாணம் ஆகி ஒருவாரம்தான் ஆனது.. ஹனிமூன் முடிஞ்சாச்சு.. ஆனால் சாதியை சொல்லி கணவன் தன்னை திட்டியதால், ஸ்டேஷனில் தூக்கி உட்கார வைத்துவிட்டார் புது மனைவி சோபியா!
சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். 26 வயதாகிறது. டைல்ஸ் ஒட்டும் வேலை பார்க்கிறார். இவருக்கு பக்கத்து வீட்டு பெண் 24 வயது சோபியா.

பக்கத்து வீடு என்பதால் அடிக்கடி பார்த்து கொள்வது, பேசிக் கொள்வது என பழக்கம் அதிகமானது. இது காதலாக மாறியது. இருவரும் வேறு வேறு சாதியை சார்ந்தவர்கள். காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்தது. வழக்கம்போல கொந்தளித்த பெற்றோர், கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் எப்படியாவது வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்து, அதன்படியே போனவாரம்தான் பழனி முருகன் கோயிலில் மாலை மாற்றி கல்யாணம் செய்து கொண்டனர். ஒருவாரம் முழுக்க ஹனிமூன்.. நிறைய இடங்களுக்கு இந்த காதல் ஜோடி சுற்றிதிரிந்தது. ஊருக்கு போனால் பிரச்சனை வந்துவிடும் என்று நினைத்து, சேலம் சூரமங்கலம் பகுதியில் ஒரு வீடு எடுத்து குடும்பம் நடத்திவந்தனர்.
ஒருவாரம் ஆன நிலையில் சுரேஷ்குமாரும், அவரது குடும்பத்தினரும் சோபியாவை சாதி ரீதியாக பெயரை சொல்லி அடிக்கடி கடுப்பேற்றி வந்துள்ளனர். இப்படி சாதியை சொல்லி திட்டி கொண்டிருந்தால், இது சரிப்பட்டு வராது என்று நினைத்து, சோபியா சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் சுரேஷ்குமார் மீது புகர் தந்தார். கணவர் மீது மட்டுமில்லை, மாமனார், மாமியாரையும் புகாரில் குறிப்பிட்டு சொன்னார்.
இதையடுத்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் எஸ்.சி., எஸ்.டி.சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர். இந்த சமயத்தில் மாமியார், மாமனார் எஸ்கேப் ஆகிவிடவும்... அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். கல்யாணம் ஆகி ஒரே வாரத்தில், சாதியை சொல்லி திட்டியதால், கணவனை சிறைக்கு அனுப்பிய விவகாரம் பரபரப்பை தந்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications