சேலம் கோயிலில் ஆச்சரியம்.. நரநரன்னு பற்களை கடித்து திடீர்னு தோன்றிய "பத்ரகாளி.." பக்தர்கள் பரவசம்
சேலம்: சேலத்தில் நடந்துள்ள ஆடித்திருவிழாவானது, இணையத்தில் பெரும் வைரலாகி கொண்டிருக்கிறது.. என்ன காரணம்? திருவிழாவை அசத்திய இந்த பெண்கள் யார்?
வருடத்துக்கு ஒருமுறை 22 நாட்கள் நடைபெறும் ஆடித்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது... கோட்டை மாரியம்மன் கோவிலை மையமாக வைத்து அதனை சுற்றியுள்ள கிராமத்திலுள்ள அம்மன் கோவில்களில் இந்த ஆடித்திருவிழா ஜரூராக நடைபெறுவது வழக்கமாகும்.. இதற்காக பக்தர்கள், விரதமிருந்து நேர்த்திக்கடனை செலுத்த வருவார்கள்..

திருவிழா: அதேபோல, இந்த திருவிழாவில் மிகவும் பிரசித்தி பெற்றது வண்டி வேடிக்கை நிகழ்ச்சியாகும்.. இதில், பக்தர்கள் கடவுள் போல வேடமிட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். இது 100 வருடங்களுக்கு மேலாக மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும்..
கண்ணைக்கவரும் வண்ணமய மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில், கடவுள் வேடமணிந்துக்கொண்டு, மக்கள் கூட்டத்தில் வலம்வந்து ஆசி வழங்குவார்கள்.. இதற்காகவே பக்தர்கள் நோன்பு இருந்துகடவுள் வேடம் தரிப்பார்கள். பெரும்பாலும் இந்நிகழ்வில் பங்கு பெறுவதில்லையாம். அதனால் ஆண்களே பெண் வேடமிட்டு வலம் வருகிறார்கள்.,
கடவுள் வேடம்: கடவுள் வேடமிடும் பக்தர்கள், சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன், அர்ச்சுனன் வில்வித்தை அரங்கேற்றம், மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, வள்ளி தெய்வானை, பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ரதி மன்தமன், கிருஷ்ணன், நரசிம்மன் இப்படி எண்ணற்ற கடவுள் அவதாரங்களை வேடமிடுவார்கள். இந்த வண்டி வேடிக்கையை பார்ப்பதற்கென்றே வெளியூர்களிலிருந்தெல்லாம் பக்தர்கள் பங்கேற்பார்கள்.
அப்படித்தான், இப்போது தினமும் சேலம் குகை மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில் என சேலம் மாவட்டத்தில் பல்வேறு அம்மன் கோவில்களில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி களைகட்டியது.. மேச்சேரி சந்தைப்பேட்டையில் சின்ன மாரியம்மன் கோவில் விழாவில், அக்னி கரகம், அலகு குத்துதல், பொய்க்கால் குதிரை போன்றவை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
வண்டிவேடிக்கை: பிறகு வண்டிவேடிக்கை நிகழ்ச்சியும், வண்டிவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.. அப்போது அம்மன் வேடமிட்டு பெண்கள் வரிசையாக வரத்துவங்கினார்கள்.. பிரமாண்டமான வண்டியில், ஜொலிஜொலித்தபடி பெண்கள், கடவுள்களை போல் அலங்காரம் செய்து, வண்டிகளில் உட்காரவைத்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

அகிலாண்டேஸ்வரி, உலகநாயகி, காமாட்சி, காலபைரவி, சத்திய சொரூபி, சரஸ்வதி தேவி, ஞானரூப தேவி, தாட்சாயணி தேவி, துர்க்கை, பகவதி, பார்வதி தேவி, மீனாட்சி, பத்ரகாளியம்மன், வேப்பிலைக்காரி, உமா தேவி, காயத்ரி தேவி, பெரிய நாயகி என பல்வேறு கடவுள் வேடங்கள் தரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு ஆசி தருவதுபோலவே இவர்கள் வாகனத்தில் காட்சிதந்தனர்..
நடனம்: வாணவேடிக்கையின் வண்ணமயமான விளக்குகளில், இந்த பெண்களை கண்டதுமே மொத்த பக்தர்களும் பரவசம் அடைந்தனர்.. இந்த கண்கவர் வண்டியின் முன்பு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொய்க்கால் குதிரை நாட்டியம் ஆடியபடி ஊர்வலமாக வந்தனர்...!!












Click it and Unblock the Notifications