For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'சிமேகோ' தரவரிசை 2021.. இந்தியாவில் முதலிடம் பிடித்த.. சென்னை பாரத் உயர்கல்வி & ஆராய்ச்சி நிறுவனம்

சென்னை: சென்னையைச் சேர்ந்த உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 2021ம் ஆண்டுக்கான சிமேகோ நிறுவனத்தின் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் நாட்டிலேயே முதலிடம் பிடிக்கும் தனியார் பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

எல்ஸ்வியருடன் கூட்டாண்மையில் சிமேகோ இன்ஸ்டிடியூட் வெளியிடும் தரவரிசை பட்டியல், உலகளவில் அதிக நேர்மையானதாக கருதப்படுகிறது. விண்ணப்பங்களின் அடிப்படையில் அல்லாமல் கடந்த ஆண்டுகளில் சர்வதேச தரவுப்பேழைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இது தயாரிக்கப்படுகிறது.

SCImago Rankings: Bharath Institute of Higher Education and Research Tops the List of Private Universities in India

கல்விசார் ஆராய்ச்சி செயல்பாடுகளின் தரம், புத்தாக்க முயற்சிகளின் விளைவுகள் மற்றும் சமூகத்தின் மீதான தாக்கம் ஆகியவை அடிப்படையிலான பகுப்பாய்வை சார்ந்து இத்தரவரிசை பட்டியல் உருவாக்கப்படுகிறது.
பொறியியல், சுற்றுச்சூழல் அறிவியல், கணினி அறிவியல், இயற்பியல் மற்றும் வானியல் ஆகிய கல்வித் திட்டங்களில் இந்தியாவில் தரவரிசையில் முதலிடம் பிடித்திருக்கும் பாரத் உயர்கல்வி நிறுவனம் (BIHER) அதிக எண்ணிக்கையில் முதலிடம் பிடித்த கல்வித்திட்டங்களைக் கொண்டிருக்கும் ஒரே தனியார் பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் பெறுகிறது. இந்தியாவுக்கான பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெற்றிருப்பதோடு, ஆராய்ச்சியில் முதன்மையான இந்திய பல்கலைக்கழகம் மற்றும் உலகளவில் 300 முதன்மையான பல்கலைக்கழகங்களுள் இந்தியாவைச் சேர்ந்த ஒரே தனியார் பல்கலைக்கழகம் என்ற கௌரவத்தையும் BIHER பெற்றிருக்கிறது.

SCImago Rankings: Bharath Institute of Higher Education and Research Tops the List of Private Universities in India

BIHER-ன் தலைவர் டாக்டர். J. சன்தீப் ஆனந்த், "சிமேகோ தரவரிசை பட்டியல் 2021-ல் இந்திய மற்றும் உலகளாவிய பல்கலைக்கழகங்களுள் பல முதலிடங்களைப் பிடித்திருப்பதும் மற்றும் இந்தியாவில் அனைத்து பல்கலைக்கழகங்கள் மத்தியிலும் ஆராய்ச்சியில் தலையாயது என்று அறியப்பட்டிருப்பதும் ஒரு மிகச்சிறந்த சாதனையாகும். பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் என அனைவருக்கும் பெருமைதரும் தருணமாக இது இருக்கிறது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கடுமையான உழைப்பிற்கு இந்த வெற்றியை நாங்கள் அர்ப்பணிக்கிறோம். இச்சாதனையானது இன்னும் புதிய தர அளவுகோல்களை நிர்ணயிக்க எங்களை ஊக்குவித்திருக்கிறது," என்று கூறினார்.

பல்வேறு துறைகளில் 100 ஆராய்ச்சி செயல்திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க ரூ. 1 கோடியை BIHER சமீபத்தில் ஒதுக்கீடு செய்திருக்கிறது. 25,753 ஆய்வு கட்டுரைகள், 53000 நற்குறிப்புகள், மற்றும் 476 உரிமங்கள் ஆகியவற்றைக் கொண்டு நாட்டில் 7வது இடத்தை BIHER கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. உலகெங்கிலுமிருந்து வரும் 10,000 மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் உயர்தர கல்வியை வழங்கிவரும் BIHER, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 600 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில், 1.3 கோடி சதுரஅடி பரப்பு கட்டிடங்களைக் கொண்டிருக்கும் ஆறு கல்வி வளாகங்களில் இயங்கி வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X