திடீரென உள்வாங்கிய கடல்.. வெளியே தெரிந்த பாறைகள் - ராமேஸ்வரம் சென்ற பக்தர்கள் ஆச்சரியம்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடல் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியதால் பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: அக்னி தீர்த்த கடல் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியதால் அடியில் இருந்த பவளப்பாறைகள் சாமி சிலைகள் தெளிவாக வெளியே தெரிந்தன. அமாவாசை நாளில் ராமேஸ்வரத்திற்கு புனித நீராட சென்ற பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.

ராமேஸ்வரம் இந்துக்களின் புனித தலமாகும். காசி செல்பவர்கள் கண்டிப்பாக ராமேஸ்வரம் வந்து ராமநாதசுவாமியை வணங்கி செல்வார்கள். நாள்தோறும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது ராமேஸ்வரத்திற்கு வருவது வழக்கமாகும்.

Sea recedes by 100m in Rameswaram Devotees were surprised

முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கவும் தினசரியும் ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வருகின்றனர். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு ராமநாதசுவாமி திருக்கோயிலுக்குள் சென்று வழிபட்டு செல்கின்றனர்

ராமேஸ்வரம் பகுதியில் சில தினங்களாக பலத்த சூறாவளி காற்று வீசிவருவதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கடல் உள்வாங்கி இருப்பதனால் புனித நீராட வரும் பக்தர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இன்று காலை முதல் கடல் வழக்கத்திற்கு மாறாக 10 மீட்டர் தூரம் வரை கடல் உள்ளவாங்கியுள்ளது.இதனால் கடற்கரை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் தரை தட்டி உள்ளன.

இந்நிலையில் வைகாசி மாத சர்வ அமாவாசை மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் இன்று புனித நீராட பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்தனர்.

இந்நிலையில் அக்னி தீர்த்த பகுதியில் இன்று வழக்கத்திற்கு மாறாக பல அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பவளப்பாறைகள் தெளிவாக வெளியே தெரிந்தது. கடற்கரையோரங்களில் வசிக்கக்கூடிய கடல்வாழ் உயிரினங்களான நட்சத்திர மீன், சிப்பி, சங்கு உள்ளிட்டவைகள் வெளியே தெரிந்து வருகிறது இதனை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இது வழக்கமான ஒன்று எனவும் பகல் நேரத்தில் நீரோட்டம் மாறியவுடன் கடல் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் அப்போது நாட்டுபடகுகள் தானாக சரியாகி விடும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+