உணவு சப்ளை வேலைக்கு 200,000 லட்சம் சம்பளம்.. நிறைய லீவு, போனஸ்.. அள்ளிதரும் உணவகம்
சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த உணவகம் ஒன்று சப்ளையர்கள், சமையலறை உதவியாளர் ஆகிய வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்துள்ளது. அந்த விளம்பரத்தில் அவர்கள் கொடுத்த ஊதியம் மற்றும் போனஸ் உள்ளிட்ட சலுகைகளை பார்த்து பலரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரை வேலை கிடைப்பதே பெரிய விஷயமாக உள்ளது. அடிக்கடி விடுமுறை எடுப்பவர்கள், அதிக ஊதியம் வாங்குபவர்கள், சரியாக வேலை செய்யாமல் சுற்றுபவர்களை எந்த நிறுவனமும் ஏற்பது இல்லை. விரைவிலேயே வெளியே அனுப்பி விடுகின்றன.

அதேநேரம் நேரம் காலம் பார்க்காமல், கம்பெனிக்காக யார் தீவிர விசுவாசமாக வேலை செய்கிறார்களோ அவர்களுக்கே வேலை நிரந்தரமாக உள்ளது. அதேநேரம் பெரிய அளவில் நிறுவனங்கள் எந்த சலுகையும் தருவது இல்லை. சில நிறுவனங்கள் பிஎப் கூட பிடிப்பது இல்லை. இன்சூரன்ஸ், ஊதியத்துடன் விடுமுறை கூட அளிப்பது இல்லை. முக்கியமான நிறுவனங்களே உடல்நலக் காப்பீடு மற்றும் ஊதிய விடுப்பு போன்றவற்றை இந்தியாவில் தருகின்றன.
ஒரு சில நிறுவனங்களே தங்கள் பணியாளர்களை ஊக்கப்படுத்தவும், உற்சாகத்துடன் பணிபுரிய வைக்கவும் பலசலுகைகளை அள்ளி வழங்குகின்றன. அப்படித்தான் சிங்கப்பூர் உணவகம் ஒன்று ஆட்சேர்ப்பு அழைப்பு, நியாயமான ஊதியத்துடன் பல சலுகைகள் மற்றும் சலுகைகளை வழங்கி இந்தியர்களின் கவனத்தை ஈர்த்தது.
"இங்கே எஸ்ஜிபியில் உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே ஆட்கள் தேவை என்று விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. அதை கப்பார் சிங் என்பவர் ட்விட்டரில் போட்டு இந்த சலுகைகளைப் பாருங்கள் என்று கூறியிருந்தார்.அதில் சிங்கப்பூரில் உள்ள அஜும்மாவின் கொரியன் என்ற உணவகத்தில் சமையல் உதவியாளர்கள் மற்றும் சப்பளையர்கள் ஆகிய வேலைக்கு ஆட்கள் தேவை என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில் பகுதி நேர பணியாளர்களுக்கு ஒரு மணிநேரத்துக்கு $10- $15 டாலர் வழங்கப்படும் என்றும் அதாவது மணிக்கு 1250 ரூபாய் வரையிலும், முழு நேரமாக வேலை செய்தால் மாதம் $2750- $3300 ஊதியமும் ( இந்திய மதிப்பில் 2,72,764 ரூபாய் ) வழங்கப்படும் என்று விளம்பரம் செய்திருந்தது.
இது தவிர பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்து. குறிப்பாக அலவன்ஸ் தரப்படும் என்றும், வருடம்இரண்டு முறை போனஸ் தரப்படும் என்றும், ஒவ்வொரு மாதமும் ஊக்க போனஸ் வழங்கப்படும் என்றும் ஊதியத்துடன் தாராளமாக விடுமுறைகள் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மருத்துவ வசதிகள், சுகாதார பரிசோதனைகள், இன்சூரன்ஸ், ஊதிய உயர்வு, உணவு உள்பட நினைத்து பார்க்க முடியாத சலுகைகளை அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.
இதை பார்த்த பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த உணவகத்தில் வேலை செய்வது கார்ப்பரேட் வேலையைவிட சிறந்தது என்று நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள்.பலரும் இந்தியாவில் தரப்படும் சலுகைகள் பற்றி பேசி வருகிறார்கள். அதேநேரம் சிங்கப்பூரில் அதிக வாழ்க்கைச் செலவு ஆகும் என்றும் அதிக ஊதியம் தருவது தான் நியாயம் என்றும் கூறி வருகிறார்கள். நம்மூரிலும் தற்போது ஓட்டல்களில் அதிக சம்பளம் வழங்கப்படுதை சுட்டிக்காட்டும் சில நெட்டிசன்கள், ஓட்டலுக்கு மாஸ்டர்கள் சரியாக கிடைப்பது இல்லை என்று கூறி வருகிறார்கள்












Click it and Unblock the Notifications