சிங்கப்பூரில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 191 பேருக்கு பாதிப்பு- உயிரிழப்பு 8 ஆக அதிகரிப்பு
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 191 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 90 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்ததால் மொத்தம் 8 பேர் பலியாகி உள்ளனர்.
Recommended Video
சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து சிங்கப்பூரில் முழு வீச்சில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா தொற்று எந்த வகையில் பரவுகிறது? அதை எப்படி தடுப்பது என்பதிலும் சிங்கப்பூர் அரசு தீவிரமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,299 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே 90 வயது முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications