டாய்லெட் பேப்பரில் ராஜினாமா கடிதம்.. ஊழியரால் ஆடிப்போன சிங்கப்பூர் நிறுவனம்.. காரணம் இதுதான்
சிங்கப்பூர்: சிங்கப்பூரை சேர்ந்த பெண் ஊழியர் தனது ராஜினாமா கடிதத்தை டாய்லெட் பேப்பரில் எழுதி வழங்கி உள்ளார். இந்த கடிதம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் அந்த கடிதத்தை கொடுத்தது யார்? எதற்காக அப்படி செய்தார்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொதுவாக தனியார் நிறுவனங்களில் பணி செய்வோர் பலரும் அவ்வப்போது விரக்தியடைவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்களை கூறலாம். டார்க்கெட், அதிக பணிச்சுமை, கூடுதல் நேரம் பணி செய்தல், சம்பள உயர்வு இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களை முன்வைக்கலாம்.

இதில் ஒரு தரப்பினர் பரவாயில்லை என்று சகித்து கொண்டு அதே நிறுவனத்திலேயே பணி செய்வார்கள். ஆனால் இன்னொரு தரப்போ பணியை ராஜினாமா செய்து விடுவார்கள். இப்படி ராஜினாமா செய்வோர் தனது பாஸ், மேனேஜர் உள்ளிட்டவர்களிடம் நேரடியாகவோ, செல்போனிலோ அல்லது இ-மெயில் மூலமாகவும் ராஜினாமா விஷயத்தை தெரிவிப்பார்கள்.
ஆனால் சிங்கப்பூரில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. அதாவது சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியர்கள் விரக்தியின் உச்சிக்கே சென்று தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். அதோடு அந்த ராஜினாமா கடிதத்தை அவர் டாய்லெட் பேப்பரில் எழுதி அந்த நிறுவனத்தை அதிர வைத்துள்ளார். இந்த செயலை செய்தவரின் பெயர் ஏஞ்சிலா யோ.
இதுதொடர்பான கடிதத்தை ஏஞ்சிலா யோ என்பவர் தனது லிங்ட்இன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தற்போது தனியார் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். அதில்அவர் கூறியுள்ளதாவது: நான் ஒரு டாய்லெட் பேப்பர் போல பயன்படுத்தபட்டேன். மிகவும் இழிவாக நடத்தப்பட்டேன். தேவை எனும்போது பயன்படுத்தப்பட்டேன். தேவை முடிந்ததும் தூக்கி எறியப்பட்டேன்.
அந்த வார்த்தைகள் எனது நினைவை விட்டு அகல மறுக்கிறது. ஊழியர்கள் உண்மையாக பாராட்டப்படுவதை உணர வைக்க வேண்டும். அவர்கள், நிறுவனத்தை விட்டு வெளியேறினாலும் நன்றியுணர்வுடன் வெளியேற வேண்டும். மனக்கசப்புடன் அல்ல. இந்த மாதிரியான அனுபவம் விசுவாசமின்மையை குறிக்காது. நிறுவனத்தின் கலாசாரத்தைப் பற்றி அதிகம் பேசும்.
பாராட்டு என்பது ஒருவரை தக்க வைத்து கொள்வதற்கான கருவி மட்டுமல்ல. அது அவர் மீதான மதிப்பீட்டை காட்டும். பணியாளர்கள் தங்களை குறைத்து மதிப்பிடுவதாக உணர்ந்தால், அதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. பாராட்டுதலில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதனை இன்றே துவங்குங்கள் எனக்கூறி உள்ள அவர், அந்தப்பதிவுடன் கழிவறைக் காகிதத்தில் எழுதப்பட்ட ராஜினாமா கடிதத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அத்துடன், இந்த நிறுவனம் என்னை எப்படி நடத்தியது என்பதை உணர்த்துவதற்காக நான் ராஜினாமாவுக்கு இந்த காகிதத்தை தேர்வு செய்தேன். வெளியேறுகிறேன்'' என கூறியுள்ளார். இந்த ராஜினாமா கடிதம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications