Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிங்கப்பூரில் இந்தியர் செய்த காரியம்.. அப்படியே தூக்கி உள்ளே வைத்த போலீஸ்.. இனி கம்பி தான் எண்ணனும்

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டில் பெண் ஒருவரிடம் அத்துமீறிய இந்திய நபருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 22 வயது பெண்ணிடம் அந்த நபர் அத்துமீறி இருக்கிறார். இதையடுத்து உடனடியாகக் களத்தில் இறங்கிய சிங்கப்பூர் போலீஸ் அந்த நபரைக் கைது செய்துள்ளது. விசாரணை முடிவில் இப்போது அவர் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார்.

இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேர் சிங்கப்பூர் நாட்டிற்குச் செல்கிறார். படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காகச் சிங்கப்பூர் நாட்டிற்குச் செல்கிறார்கள். பொதுவாகச் சிங்கப்பூரில் வாழும் இந்தியர்களில் பெரும்பாலானோர் எந்தவொரு பிரச்சினைகளுக்கும் செல்ல மாட்டார்கள். அமைதியான ஒரு வாழ்க்கையையே நடத்துவார்கள்.

Indians in Singapore Indian-Origin Man Jailed for 5 months in Singapore for Assault on Woman

சிங்கப்பூர் வாழ் இந்தியர்

இருப்பினும், சிலர் அங்குத் தேவையில்லாத பிரச்சினைகளைச் செய்து மாட்டிக் கொள்வார்கள். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. அதாவது சிங்கப்பூரில் பெண் ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இப்போது அங்குக் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார். அவருக்கு அங்குள்ள நீதிமன்றம் ஐந்து மாத சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது..

என்ன நடந்தது

42 வயதான ஓம் குமார் ராய் என்பவர் இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார். பெண்ணின் பாதுகாப்பு கருதி, அப்பெண்ணின் பெயர் மற்றும் குற்றம் நடந்த இடம் உள்ளிட்ட தகவல்கள் நீதிமன்ற ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ஓம் குமாருக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த 2025 ஜூன் 17ம் தேதி நடந்துள்ளது. அன்றைய தினம் அதிகாலை நேரம் பாதிக்கப்பட்ட 22 வயது பெண்ணை அணுகிய அந்த நபர், தந்தையின் சக ஊழியர் என்று சொல்லி பேச்சுக் கொடுக்க முயன்றார். அப்படியே அந்தப் பெண்ணை தனிமையான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்ற ராய், அவரிடம் அத்துமீறியிருக்கிறார்.

வழக்குப்பதிவு

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அவரை தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதையடுத்து சம்பவம் உடனடியாகத் தனது பெற்றோரிடம் சென்று தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அப்பெண் புகாரளித்துள்ளார். உடனடியாக அன்றே காலை 9 மணியளவில் பெற்றோர் மூலம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.

தண்டனை

அதில் ஓம் குமார் தான் குற்றம் செய்தது உறுதியானது. இது தொடர்பான வழக்கு அங்குள்ள நீதிமன்றத்தில் நடந்தது. ஓம் குமார் தவறு செய்தது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமானது. இதுபோல அத்துமீறலில் ஈடுபடுவோருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி வழங்கப்படும். இந்த நபருக்கு 5 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+