சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
சிங்கப்பூர்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா பாதிப்பு மீண்டும் தலை தூக்க தொடங்கி இருக்கிறது. சிங்கப்பூர் நாட்டில் ஒரே வாரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதற்கு அடுத்ததாக உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் அடுத்த இரு ஆண்டுகளில் அதன் பாதிப்பு எண்ணிப் பார்க்க முடியாத அளவு இருந்தது.

லட்சக்கணக்கில் உயிரிழப்பு இருந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தீவிர படுத்தப்பட்டது. மருத்துவ கட்டமைப்புகள் மத்திய மாநில அரசுகளின் தீவிர முயற்சி காரணமாக கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
கட்டுக்குள் கொரோனா: இதனையடுத்து மத்திய அரசு சார்பில் கொரோனாவுக்கு கோவாக்சின், கோவிஷில்ட் தடுப்பூசிகள் மூன்று தவணைகளாக கொடுக்கப்பட்டது. சுமார் 200 கோடு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது. இதே போல் உலக அளவில் ஃபைசர் உள்ளிட்ட தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. இதனால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதே நேரத்தில் ஓமிக்ரான் உள்ளிட்ட மாறுபாடு அடைந்த கொரோனா அடுதடுத்து பரிணாம வளர்ச்சியடைந்து ஆங்காங்கே பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது.
சிங்கப்பூரில் பாதிப்பு: ஆனால் உடனடி சிகிச்சை உள்ளிட்டவற்றால் பாதிப்பானது அதிக அளவில் இல்லாமாலேயே இருந்தது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவலானது அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக சிங்கப்பூர் நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை அச்சம் கொள்ளத்தக்க வகையில் இருக்கிறது. கடந்த ஐந்தாம் தேதி தொடங்கி பதினொன்றாம் தேதி வரை மட்டும் சிங்கப்பூர் நாட்டில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சராசரி அதிகம்: அந்த வாரத்தில் அங்கு மட்டும் சுமார் 25,000 மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் தினமும் சராசரியாக 250 பேர் வரை கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும், அதில் மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும் ஒரு தடுப்பூசி: இதன் காரணமாக பல்வேறு மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில் கொரோனா சிகிச்சைக்கான வார்டுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது. "நாம் கொரோனா பாதிப்புடன் வாழ்வதற்கு பழக வேண்டும்.. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் 60 வயதிற்கு பட்ட மக்கள் கூடுதல் பாதுகாப்பிற்காக மேலும் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சர் ஆங் யே குங் தெரிவித்துள்ளார்.
புதிய அலை: மேலும்,"கொரோனா புதிய அலை வேகமாக பரவி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பு அடுத்த இரண்டு முதல் நான்கு வாரங்களில் ஜூன் இறுதியில் உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது புதிய அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்.. வரவிருக்கும் விஷயங்களுக்கு சுகாதார அமைப்புகளை நாம் தயார்படுத்தி வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications