சிங்கப்பூரில் இருந்தும் கோத்தபாய ராஜபக்சே தப்பி ஓடுகிறார்.. அகதியாக அடைக்கலம் தருகிறது தாய்லாந்து!
சிங்கப்பூர்: இலங்கையில் மக்கள் கிளர்ச்சியால் தப்பி ஓடிவிட்ட முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இலங்கையில் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சே, பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்தனர். இவர்களது பதவி காலத்தில் இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஒட்டுமொத்த இலங்கையே திவாலாகிப் போனது.

இதனால் இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருட்கள் என அத்தனைக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இலங்கையில் அனைத்து பொருட்களின் விலைகளும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தன. இதனால் இலங்கையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக நாசமாகிப் போனது.
இந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண கோரி இலங்கை மக்கள் தன்னெழுச்சியான கிளர்ச்சிகளை முன்னெடுத்தனர். இலங்கை தலைநகர் கொழும்பின் காலி முகத் திடலில் இந்த கிளர்ச்சி மையம் கொண்டிருந்தது.பல்லாயிரக்கணக்கான மக்கள் கொட்டும் பனியிலும் இரவும் பகலுமாக காலிமுகத் திடலில் தங்கி போராட்டங்களை முன்னெடுத்தனர். மக்களின் இந்த போராட்டங்களின் உச்சமாக முதலில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். அப்போது மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளை பொதுமக்களே தீக்கிரையாக்கினர்.
இதன்பின்னர் ரணில் விக்கிரமசிங்கே இடைக்கால பிரதமராக்கப்பட்டார். ஆனாலும் பொதுமக்களின் உக்கிர கோபம் தணியவில்லை. ஒருகட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் கைப்பற்றினர். இதனால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறிய கோத்தபாய ராஜபக்சே, பின்னர் இலங்கையைவிட்டே தப்பி ஓடினார். முதலில் மாலத்தீவில் தஞ்சமடைந்த கோத்தபாய ராஜபக்சேவுக்கு அங்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு தப்பி ஓடினார் கோத்தபாய ராஜபக்சே.
தற்போது சிங்கப்பூரில் பதுங்கி இருக்கும் கோத்தபாய ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்காக கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. இது கோத்தபாய ராஜபக்சேவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து நாளை தாய்லாந்துக்கு கோத்தபாய ராஜபக்சே தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. கோத்தபாய ராஜபக்சேவுக்கு அகதியாக தாய்லாந்து அடைக்கலம் தர முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications