சிங்கப்பூரின் நம்பிக்கை நட்சத்திரம்.. மக்களை ஆதரவை பெற்ற "4ஜி" தலைவர்.. யார் இந்த லாரன்ஸ் வோங்!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில் ஆளும் பிஏபி கட்சி தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம் லாரன்ஸ் வோங் அங்கு மீண்டும் பிரதமராகப் பதவியேற்கிறார். தனது பிஏபி கட்சிக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்த லாரன்ஸ் வோங் யார்.. இவரது பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சிங்கப்பூர் நாட்டில் இப்போது தான் பொதுத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் பிஏபி கட்சி 87 இடங்களைக் கைப்பற்றி மிகப் பெரியளவில் வெற்றி பெற்றுள்ளது. அங்கு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெறும் 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் லாரன்ஸ் வோங் அங்கு மீண்டும் பிரதமராகப் பதவியேற்கிறார். யார் இந்த லாரன்ஸ் வோங் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

வாரன்ஸ் வோங்
பொருளாதார நிபுணராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் லாரன்ஸ் வோங்.. சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் இவர் தனது பிஏபி கட்சிக்கு (People's Action Party) மிகப் பெரிய வெற்றியைப் பெற்று வந்துள்ளார். பிரச்சாரத்தின் போதே இவர் தனது மிஷனை மிகத் தெளிவாக முன்வைத்தார்.
எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் அதைத் தாண்டி சிங்கப்பூரை வழிநடத்துவதும், சிங்கப்பூர் மக்களுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை வழங்குவதுமே தனது நோக்கம் என்பதைப் பிரதமர் வோங் தெளிவாகக் கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரிகளை முன்வைத்தே வோங் பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.
2024 முதல் பிரதமர்
52 வயதான வோங், கடந்த ஆண்டு மே மாதம் பிரதமராகப் பதவியேற்றார். சுமார் 20 ஆண்டுகளாகப் பிரதமராக இருந்த லீ சியன் லூங் (72) கடந்தாண்டு பதவி விலகிய நிலையில், புதிய பிரதமராக வோங் பதவியேற்றார். 2021ஆம் ஆண்டில் நிதியமைச்சராகப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்தார். அப்போது தான் சிங்கப்பூரை வழிநடத்தும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.
4ஜி தலைவர்
கடந்த ஏப்ரல் 2022இல், அவர் பிஏபி கட்சியின் நான்காம் தலைமுறை தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இவரை 4G தலைவர் என்றும் குறிப்பிட்டனர். அதே ஆண்டில் ஜூன் மாதம் துணைப் பிரதமராகப் பதவியேற்ற வோங், இரண்டு ஆண்டுகளில் பிரதமர் பதவியையும் எட்டிப் பிடித்தார். மேலும், இவர் தான் பிஏபி கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார்.
இந்ச வோங் அமெரிக்காவில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தவர். விஸ்கான்சின் மாடிசன் பல்கலைக்கழகம் மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரி படிப்பைப் படித்தார், ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
பல்வேறு பதவிகள்
2011ஆம் ஆண்டு அரசியலில் நுழைவதற்கு முன்பு, அரசு ஊழியராகவும் பொருளாதார நிபுணராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின்னர், அரசியலில் நுழைந்த இவர் கலாச்சாரம், தேசிய மேம்பாடு மற்றும் நிதித் துறைகளுக்கு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். குறிப்பாகக் கொரோனா சமயத்தில் நிலைமையைச் சமாளிக்கச் சிங்கப்பூர் அரசு பல்வேறு அமைச்சர்களைக் கொண்ட குழுவை அமைத்திருந்தது. அந்தக் குழுவில் வோங் இடம்பெற்றிருந்தார். அப்போது இவர் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் தான் இவரை மக்களிடையே எடுத்துக் கூட்டிச் சென்றது.
மிக முக்கிய முன்னெடுப்பு
2022ஆம் ஆண்டில், அவர் ஃபார்வர்டு சிங்கப்பூர் என்ற முன்னெடுப்பைத் தொடங்கினார்.. PAPஇன் இளைய தலைவர்கள் சிங்கப்பூர் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை இதில் தெரிவிக்கலாம். இது திட்டமிடலுக்கு உதவியது மட்டுமின்றி வோங்க்கை ஒரு நல்ல தலைவராகக் காட்டியது. மேலும், இவருக்கு மிகப் பெரிய பூஸ்ட்டை கொடுத்து இவரது அரசியல் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டதும் இந்த முன்னெடுப்பு தான் என்கிறார்கள். அதுவே இந்தத் தேர்தலிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications