"திரை மயக்கத்தில் இளைஞர்கள்" ரசிகர்களுக்கு நடிகர்கள் அறிவுரை வழங்க வேண்டும்.. சீமான் வலியுறுத்தல்!
சிவகங்கை: சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகர்கள் தங்களை படங்களை வெளியிடும் போது ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும், இளைஞர்கள் திரை மயக்கத்தில் இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன் வரவேண்டும் என்ற தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் சட்டசபை உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடைபெற்று, இறுதியில் ஒருமனதாக நிறைவேறியது.
150 ஆண்டு கால கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன் வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதை பல்வேறு கட்சிகளும் வரவேற்றுள்ளனர்.

சீமான் பேட்டி
இந்த நிலையில் தேவகோட்டை ஆனந்தா கல்லூரி கலைவிழா நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சீமான் கூறுகையில், சேது சமுத்திரம் திட்டத்தை அதிகாரத்தில் இருந்த போதே கொண்டு வர முடியவில்லை. அவ்வளவு இடைவு ஏற்பட்டது. தற்போது பாஜகவிடம் அதிகாரம் இருக்கிறது. அதனால் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த விடுவார்களா என்பது தெரியவில்லை. இதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

செவிலியர்கள் போராட்டம்
தொடர்ந்து செவிலியர்கள் போராட்டம் பற்றிய கேள்விக்கு, செவிலியர்கள் போராட்டமும், கோரிக்கைகளும் நியாயமானது. அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பணி வழங்கும் போது, நிரந்தர பணியாளர்களாக மாற்றுவோம் என்று கூறியே பணிக்கு எடுத்தார்கள். இந்த துறைகளில் மட்டுமல்ல, மருத்துவர்கள், ஆசிரியர்கள் என பலரும் ஒப்பந்த பணியாளர்களாக எடுத்து வருகிறார்கள். அவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

திரைமயக்கத்தில் இளைஞர்கள்
தொடர்ந்து வாரிசு மற்றும் துணிவு பற்றிய கேள்விக்கு, அதிக பொருட்செலவில் இரு படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கான சந்தைப்படுத்தலை செய்தால் மட்டுமே, பணத்தை எடுக்க முடியும். ஆனால் பொழுதுபோக்கு, கேளிக்கைகளில் அதிக நாட்டம் கொண்ட மக்களை, போராட்டத்திற்கு தயார் செய்ய முடியாது. கேரளா, ஆந்திராவில் கூட இவ்வளவு கொண்டாட மாட்டார்கள். ரசிகர்களின் கொண்டாட்டம் எல்லை மீறியுள்ளது. ரசிகர்களை நடிகர்கள் கண்டிக்க வேண்டும். இளைஞர்கள் திரை மயக்கத்தில் இருக்கிறார்கள் என்று கூறினார்.

ஜல்லிக்கட்டு
தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி பற்றிய கேள்விக்கு, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கேட்பதில்லை தவறில்லை. ஏனென்றால் கொரோனா வைரஸ் மீண்டும் வேறு வடிவில் பரவுகிறது. ஏனென்றால் பெரியளவில் மக்கள் கூடுவார்கள். மற்றபடி திருநீர், குங்குமம் பூசக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் பற்றி பெரிதாக கண்டுகொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
தொடர்ந்து சனாதனம் தொடங்கியதே தமிழ்நாடு என்று ஆளுநர் பேசிய கருத்து பற்றிய கேள்விக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி எதனை சரியாக பேசியுள்ளார். சனாதன தர்மத்தை எதிர்த்த முதல் வேதம் தமிழ் தான். சனாதனத்தை கொண்டு வந்தது ஆரியர்கள் தான். ஆளுநர் அவரின் விருப்பம் போல் இயங்கி வருகிறார். ஆளுநரின் செயல்பாடுகளை பாஜக ரசித்து வருகிறது. ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்பது மட்டுமல்ல, பதவியையே திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications