எடைக்கு போட்டா கூட போகாது.. ஓட வைக்கவே ஆயிரம் ரூவா செலவாகும்! தரமற்ற சைக்கிள்.. புலம்பும் மாணவர்கள்
சிவகங்கை: தமிழக அரசு சார்பில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள் தரமற்றிருப்பதாகவும் அவை கடைகளில் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா சைக்கிள்கள் மிகவும் தரமற்று இருப்பதாகவும், அவை தங்களுக்குத் தான் செலவு வைக்கும் வகையில் இருப்பதாக மாணவர்கள் புகார் கூறுகின்றனர்.
தமிழக அரசின் சார்பில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் SC/ST மாணவிகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட நிலையில், தொடர்ந்து விதிமுறைகள் தளர்த்தப்பட்டது.

தொடர்ந்து பதினோராம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஐடிஐ உள்ளிட்டவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா காரணமாக இலவச சைக்கிள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு தரம் இல்லாத சைக்கிள்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதன் காரணமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதனை பழைய இரும்பு கடைகளுக்கு விற்று வருவதாக புகார் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் புகார்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக பெற்றோர்களும், மாணவர்களும் தொடர் புகார் அளித்து வருகின்றனர். மேலும் தரமற்ற சைக்கிள்களை திரும்பப் பெற்றுக் கொண்டு தரமான சைக்கிள்களை வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்து வருகிறது.
இதற்கிடையே சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா சைக்கிள்கள் மிகவும் தரமற்று இருப்பதாகவும், அவை தங்களுக்குத் தான் செலவு வைக்கும் வகையில் இருப்பதாக மாணவர்கள் புகார் கூறுகின்றனர். சிகங்கை மாவட்டம், காரைக்குடியில் முத்துப்பட்டினம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மு.வி. மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், 210 பேருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பெரும்பாலான சைக்கிள்கள் பல்வேறு குறைபாடுகளுடன் காணப்பட்டன. இதனால் மாணவர்கள் கடும் அவதி அடைந்த நிலையில், பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பெடல் இல்லாத சைக்கிள், வால் டியூப் இல்லாத சைக்கிள், தரமற்ற ஸ்டாண்ட் என ஒவ்வொரு சைக்கிளுக்கும் குறைந்தபட்சம் ஒரு பிரச்னையாவது இருந்தது.
இதனால் அந்த சைக்கிள்களை ஓட்டிக் கொண்டு செல்ல முடியாது. சைக்கிளை ஓட்டும் நிலைக்கு கொண்டு வரவே 1,000 ரூபாய்க்கு மேல் ஆகும் என பெற்றோர்கள் புலம்பினர். சில நாட்களுக்கு முன்பு இதே போன்று தரமற்ற இலவச சைக்கிள் வழங்கப்பட்டபோது முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கண்டித்ததோடு, சம்பந்தப்பட்ட ஒப்பந்தகாரரிடமே ஒப்படைத்து மாணவர்களுக்கு தரமான சைக்கிள் வழங்க கூறினார்.
ஆனாலும் அதேபோன்ற சைக்கிள்கள் தான் வழங்கப்படுகின்றன. எனவே விலையில்லா என்பதை விட மாணவர்களுக்கு செலவில்லா சைக்கிள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கும் நிலையில், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாணவர்களுக்கு தரமான சைக்கிள்களை வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications