Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இங்க பாருங்க.. "கிடா வெட்டுக்கு தடையா?" கார்த்தி சிதம்பரம் செய்த "தரமான" சம்பவம்.. டிரெண்டிங்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: நமது நாட்டில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் கோயில்களில் கிடா வெட்டுவதைத் தடை செய்வார்கள் என்று கார்த்தி சிதம்பரம் பேசி வரும் நிலையில், இது தொடர்பாக அவர் போட்டோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

Congress Karti Chidambaram shares the picture of Kida cutting in his twitter

கிடா வெட்ட தடை: இதற்கிடையே கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கூட்டம் ஒன்றில் பேசிய சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், பாஜக மீண்டும் வென்றால் கிடா வெட்டக் கூட தடை விதிப்பார்கள் என்று பரபர கருத்தைக் கூறியிருந்தார். அவர் பேசுகையில், "இது சாதாரண தேர்தல் இல்லை.. நமது கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் தேர்தல்.

நான் சொல்கிறேன். மீண்டும் மோடி அரசு அமைந்தால் கிடா வெட்டி சாமி கும்பிட தடை செய்வார்கள்... நமது பழக்க வழக்கங்களுக்குத் தடை விதிப்பார்கள். சமஸ்கிருதம், மேல்தட்டு முறைகளில் வழிபாடு நடத்த வேண்டும் என்பார்கள். எனவே நமது கலாச்சாரத்தைப் பழக்க வழக்கத்தை வழிபாட்டு முறையைத் தடை செய்யும் நபர்கள் வேண்டுமா என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்" என்று பேசியிருந்தார்.

மோடி பேச்சு: இந்தச் சூழலில் தான் பிரதமர் மோடி காஷ்மீரில் பேசும் போது, எதிர்க்கட்சியினர் புனிதமான சாவன் மாதத்தில் ஆட்டிறைச்சியைச் சமைத்துச் சாப்பிட்டு, பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றனர்" என்று கூறியிருந்தார். பிரதமரின் இந்தப் பேச்சுக்கு இணையத்தில் பலவிதமான கருத்துகள் பதிலாக வந்தது. என்ன சாப்பிட வேண்டும் என்பதற்குக் கூட கட்டுப்பாடு விதிப்பார்கள் என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள்.

விமர்சனம்: இதற்கிடையே சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரமும் இது தொடர்பாக விமர்சித்து ட்வீட் செய்திருந்தார். அதில் அவர், "நான் சொன்னது போலவே.. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாகக் கிடா வெட்டி, சேவலை நேர்த்திக்கடனாகக் கொடுப்பதைத் தடை செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். பாஜக வட இந்திய மேல்சாதி சமஸ்கிருத சைவ "இந்துத்துவா" என்று பிரச்சாரம் செய்கிறது, இது கிராமப்புற தென்னிந்திய நம்பிக்கை நடைமுறையில் இருந்து மிகவும் வேறுபட்டது" என்று சாடியுள்ளார்.

போட்டோ: கார்த்தி சிதம்பரத்தின் இந்த பிரச்சாரத்திற்கு அங்கே கிராமங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் தொடர்ச்சியாக இது தொடர்பாக அவர் பேசி வருகிறார். இதற்கிடையே அவர் தனது எக்ஸ் பக்கத்தில் போட்டோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அது அப்பகுதியில் நடைபெறும் கிடா வெட்டு பூஜை தொடர்பான கட் அவுட். அதன் அருகே நின்று எடுத்துக் கொண்ட போட்டோவை தான் கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மேற்பனைக்காடு பகுதியில் உள்ள பட்டவையா அய்யனார் கோயிலில் நடக்கும் கிடா வெட்டு பூஜை தொடர்பானதாகும். தென்னிந்தியக் கிராமங்களில் நடக்கும் பூஜைகள் என்பதில் கிடா வெட்டு முக்கிய நிகழ்வு என்பதைக் காட்டும் வகையில் அவர் இதைப் பதிவிட்டுள்ளார். இதை பாஜகவினர் தடை செய்துவிடுவார்கள் என்பதே அவரது பிரச்சாரமாக இருக்கிறது. அதைச் சுட்டிக்காட்டும் வகையிலேயே அவர் இந்த போட்டோவை பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ்நாடு: தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் கோயில்களில் ஆடு, கோழி வெட்டும் பழக்கம் பல நூறு ஆண்டுகளாகப் பழக்கமாகவே இருந்து வருகிறது. இந்தச் சூழலில் தான் கடந்த 2003இல் ஜெயலலிதா ஆட்சியில் இதற்குத் தடை விதித்தார். கோயில்களில் தெய்வத்திற்குப் பலியிடுதல் என்ற பெயரில் ஆடுகள் மற்றும் பறவைகளைப் படுகொலை செய்யக் கூடாது என்றும் இதனைச் செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதற்கு மிகப் பெரியளவில் எதிர்ப்பு வந்த நிலையில், அதன் பிறகே ஜெயலலிதா அரசு இந்தச் சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டது. மீண்டும் அதுபோல ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும் என்பதையே கார்த்தி சிதம்பரம் பிரச்சாரமாகச் செய்து வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+