சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசு விழா மேடையில் கட்சி பிரமுகர்! திமுக மாணவரணி நிர்வாகியின் ஆர்வக்கோளாறு! சீனியர்கள் அப்செட்!

Google Oneindia Tamil News

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் திமுக மாணவரணி பெண் நிர்வாகி ஒருவர் ஆர்வக்கோளாறில் பங்கேற்றது அங்கிருக்கும் சீனியர் நிர்வாகிகள் மத்தியில் புகைச்சலை கிளப்பியுள்ளது.

கடந்த வாரம் சனிக்கிழமை அன்று சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு ஆய்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்திருந்தார்.

அப்போது அவரை வரவேற்க வந்த திமுக முன்னணி நிர்வாகிகள் பலரும் வரவேற்பு கொடுத்ததை தொடர்ந்து ஒதுங்கிக் கொண்டனர். அவர் பங்கேற்கும் அரசு விழா மேடையில் ஏறுவது, ஆய்வின் போது உடனிருப்பது என தர்ம சங்கடத்தை கொடுக்காமல் அதிகாரிகளுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டனர்.

Dmk student wing executive poorna sangeetha on stage of government function

ஆனால் திமுக மாணவரணியில் மாநில துணைச் செயலாளராக அண்மையில் பொறுப்பு பெற்ற பூர்ண சங்கீதா என்ற கட்சி பிரமுகர் அரசு விழா மேடையில் ஏறி அங்கிருக்கும் மற்ற சீனியர்களை கோபம் கொள்ள வைத்திருக்கிறார்.

இதேபோல் இன்னும் ஒரு சில இடங்களிலும் அரசு புரோட்டகால் அறியாமல் ஆர்வக்கோளாறில் முன் நின்றிருக்கிறார். இதனிடையே பெண் என்பதால் அவரை கீழே இறங்கச் சொல்லவும் அதிகாரிகள் யோசித்திருக்கின்றனர்.

மறைந்த திமுகவின் மூத்த முன்னோடி எஸ்.எஸ்.தென்னரசுவின் உறவினர் பூர்ண சங்கீதா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அரசியலுக்கு வந்தே ஓரிரு ஆண்டுகள் மட்டுமே ஆவது கவனிக்கத்தக்கது.

இதனிடையே பூர்ண சங்கீதாவுக்கு அரசு நிகழ்ச்சிகள் குறித்த புரோட்டகால்கள் பற்றி முறையாக யாரேனும் எடுத்துக் கூறியிருந்தால் அவர் இது போன்ற விமர்சனங்களை தவிர்த்திருக்க முடியும்.

அதிருப்தி திமுக மாஜி நிர்வாகிகளுக்கு எடப்பாடி தூது! வளைத்து பிடித்து ஆட்களை திரட்டும் தனி டீம்! அதிருப்தி திமுக மாஜி நிர்வாகிகளுக்கு எடப்பாடி தூது! வளைத்து பிடித்து ஆட்களை திரட்டும் தனி டீம்!

English summary
The participation of a DMK student wing executive in govt event held in Sivagangai district has created a stir among the senior executives there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X