சிவகங்கையில் பள்ளி மாணவியிடம் செய்த அசிங்கம்.. சிக்கிய சத்துணவு அமைப்பாளர்.. போக்சோவில் கைது
சிவகங்கை: பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பள்ளி, கல்லூரி, பொது இடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேற்றப்படுகின்றன. சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை அனைத்து தரப்பினரும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

பாதுகாப்பற்ற சமுதாயமாக மாறி வருவதால் பெண் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியில் அனுப்புவதற்கே பெற்றோர்கள் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி ஒருவரை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, மணப்பாறையில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பள்ளி தாளாளரின் கணவர், ஆசிரியர் உள்ளிட்டோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். திருப்பூரில் வேலை தேடி வந்த பெண் கணவன், குழந்தைகள் கண் முன்னே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்குச் செல்வதற்காக இளம்பெண், கணவர் மற்றும் குழந்தை ஆகியோர் ரயில் நிலையத்தில் காத்திருந்துள்ளனர்.
ஒடிசாவை சேர்ந்த இந்த இளம்பெண் திருப்பூரில் கடந்த சில நாட்களாக தங்கி வேலை பார்த்து வந்திருக்கிறார். தற்போது வேலை இல்லாத நிலையில் ஊருக்கு செல்வதற்காக திருப்பூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த பீகாரைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பனியன் நிறுவனத்தில் வேலை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அவர்களும் அந்த இளைஞர்களை நம்பிச் சென்றுள்ளனர். திடீரென பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற மூன்று இளைஞர்களும் கத்தி முனையில் அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கோவை, பந்தய சாலையில் மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஓவிய ஆசிரியரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அரங்கேறி வரும் நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு சத்துணவு அமைப்பாளர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, சத்துணவு அமைப்பாளரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் பகுதியில் உள்ள இடும்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். 59 வயதான இவர் அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். 3 மாதங்களில் சரவணன் பணி ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அந்த அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு சரவணன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த அரசுப் பள்ளியிலும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
அப்போது அப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஒருவர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய அதிகாரிகளிடம் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். அவர்கள் இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஜோதியிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பள்ளியின் சத்துணவு அமைப்பாளரான சரவமணன் பாலியல் தொல்லை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். சத்துணவு அமைப்பாளரே மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications