எச்.ராஜா இப்படி சொல்லிட்டாரே.. யோசிக்காம ‘வாழ்த்து’ சொன்ன கார்த்தி சிதம்பரம்.. குசும்ப பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை : தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்த நிலையில், "சர்வதேச அரசியலுக்குச் செல்வதற்கு வாழ்த்துகள்" என கிண்டலாக கூறியுள்ளார் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்.

கடந்த 2019 தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நின்ற கார்த்தி சிதம்பரம், பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை விட 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1999 முதல் தொடர்ந்து பல தேர்தல்களில் போட்டியிட்டு வரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா இனி தேர்தல்களில் நிற்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

Karti chidambaram teases h raja who announced retirement from electoral politics

இந்நிலையில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையால் ஒரு மாற்றமும் நடக்காது. 2ஜி வழக்கில் தணிக்கையாளர் மன்னிப்புக் கோரினாலும் நான் பாவமன்னிப்பு வழங்க மாட்டேன். அது கணக்குப் பிழை மட்டுமல்ல. அரசியல் சூழ்ச்சி எனத் தெரிவித்தார்.

மேலும், தொகுதி மக்கள் என்னை மறந்துவிட்டதாகக் கூறும் எச்.ராஜாவுக்கு மக்களுக்காகப் பேசும் தகுதி இருக்கிறதா, அவர், தன்னை மறக்காமல் இருக்க வேண்டும் என்றார். தேர்தல் அரசியலிலிருந்து விலகுவதாக ஹெச்.ராஜா கூறியிருக்கிறாரே என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், "சர்வதேச அரசியலுக்குச் செல்வதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என கிண்டலாக கூறினார்.

மேலும் பேசிய கார்த்தி சிதம்பரம், "எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிரான கருத்துக்களை எழுப்பக்கூடாது என்ற எண்ணத்தில் நாடாளுமன்றம் நடக்கிறது. அதை மனதில் வைத்துதான் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யும் நிகழ்வு நடந்துள்ளது. அவரை பதவி நீக்க வேண்டும் என்பதற்காகவே வழக்கு தொடர்ந்து தண்டனை கொடுத்துள்ளனர். இந்தியாவில் இதுபோல் இதுவரை வேறு யாருக்கும் தண்டனை கொடுத்தது இல்லை.

காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்க அனுமதி கொடுத்ததில் தமிழ்நாடு அரசின் அனுமதி இன்றி அறிவித்தது தவறு. எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. நடைபெற உள்ள கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 140 இடங்களை பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்" எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+