வங்கி கேட்டை இழுத்து மூடிய ஊழியர்கள்! ரூ.5000 உரிமை தொகையை எடுக்க ஒரே நேரத்தில் குவிந்த பெண்கள்
சிவகங்கை: ரூ.5000 உரிமைத் தொகை கடந்த 13ம் தேதி பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது. இதற்கிடையே தங்கள் உரிமைத் தொகை பணத்தை எடுக்க மானாமதுரையில் ஒரே நேரத்தில் வங்கியின் முன்பு பெண்கள் குவிந்தனர். கூட்டம் ஒரு கட்டத்தில் கையை மீறிய நிலையில், வேறு வழியில்லாமல் வங்கியின் மெயின் கேட் பூட்டப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் என அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த 2023ம் ஆண்டு முதல் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இடையில் விடுபட்டவர்களும் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடத்தப்பட்ட நிலையில், இப்போது மாநிலம் முழுக்க 1.31 கோடி பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

உரிமைத் தொகை
ஒவ்வொரு மாதம் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்தச் சூழலில் தான் இந்த மாதம் 13ம் தேதி காலையில் 7 மணியளவில் பெண்களுக்கு சர்ப்ரைஸாக ஒரு மெசேஜ் வந்தது. அதில் உரிமைத் தொகையாக ரூ.5000 வரவு வைக்கப்பட்டு இருந்தது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.5000 உரிமைத் தொகை வழங்கப்பட்டது.
பரவிய தகவல்
மேலும், இந்த மாதம் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வந்ததால் இரு நாட்கள் முன்பு, வாரத்தின் கடைசி வேலை நாளான வெள்ளிக்கிழமை பணம் வழங்கப்பட்டது. இந்த எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்துள்ளது. அதேநேரம் கடந்த சில நாட்களாகவே இணையத்தில் மற்றொரு தகவலும் பரவியது. அதாவது அரசு கொடுத்த மகளிர் உரிமைத் தொகையைத் திரும்பப் பெறவுள்ளதாகத் தகவல்கள் பரவின. இதில் எந்தவொரு உண்மையும் இல்லை என்றாலும் கூட இதுபோன்ற தகவல்கள் பரவின.
இருப்பினும், இதனால் பயந்து போன பெண்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முயன்றனர். மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் இதுபோல ஒரே நேரத்தில் பெண்கள் பணத்தை எடுக்க முயன்றனர். இதனால் பல்வேறு வங்கிக் கிளைகளிலும் கூட்ட நெரிசல் அதிகரித்தது.
வங்கியை இழுத்து மூடிய ஊழியர்கள்
இன்று மானாமதுரையிலும் அப்படித் தான் ஒரே நேரத்தில் பல நூறு பெண்கள் உரிமைத் தொகையை வங்கியில் இருந்து எடுக்கக் குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த வங்கி ஊழியர்கள் தங்களால் முடிந்த எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தனர். இருப்பினும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. கூட்டம் தொடர்ந்து அதிகரித்ததால் ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் வங்கி கதவை மூடினர்.
நிலைமை எடுத்துச் சொன்ன வங்கி ஊழியர்கள், நாளை கூட வந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் எனச் சொல்லியுள்ளனர். இருப்பினும், சில பெண்கள் அவர்கள் சொல்வதைக் கேட்காமல் அங்கேயே காத்திருந்தனர். மேலும், வங்கி கதவைத் திறந்து தங்கள் பணத்தைக் கொடுக்கும்படியும் வலியுறுத்தினர். இதனால் அங்குச் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் ஸ்டாலின்
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கச் சிலர் நினைத்ததாகவும் அதை முறியடிக்கும் வகையில் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். மேலும், திமுக ஆட்சி மீண்டும் அமையும்போது, ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications