சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மானாமதுரையில் செம போட்டி.. போன முறை குக்கர்.. இந்தவாட்டி பரிசு பெட்டி.. தேறிடுவாரா மாரியப்பன்

மானாமதுரையில் அதிமுக-திமுக இடையே பலமான போட்டி எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Manamadurai Elekiyadasan: மானாமதுரை தொகுதி வேட்பாளர்- இவர் தானா?- வீடியோ

    சென்னை: மானாமதுரை தனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாகராஜனுக்கும், திமுக வேட்பாளர் இலக்கிய தாசனுக்கும் செம போட்டி நடந்து வருகிறது!

    மானாமதுரை தொகுதி வைகையாற்று கரை ஓரமுள்ள தொகுதி. இருந்தாலும் விவசாயம் ஒன்றும் வளமாக இல்லை. நெல், மிளகாய், தென்னை விவசாயம் போன்றவை முக்கிய தொழிலாக உள்ளது.

    முக்குலத்தோர், பட்டியலினத்தவர், யாதவர், இஸ்லாமியர்கள், பிள்ளைமார், முத்தரையர் செட்டியார் மற்றும் இதர சமூகத்தினர் இந்த சமூகத்தில் வசித்து வருகிறார்கள். இங்கு மண்பாண்ட தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர்.

    புது சின்னம்

    புது சின்னம்

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளில் இதுவும் ஒன்று. போனமுறை எம்எல்ஏ ஆன மாரியப்பன் கென்னடிதான் இந்த முறையும் அமமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். ஒரே வித்தியாசம் போனமுறை குக்கர், இந்த முறை பரிசுப்பெட்டி சின்னம். சின்னம் இப்போதுதான் கிடைத்தது என்றாலும் மிக தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார்.

    நிலக்கோட்டை.. தக்க வைப்பாரா தங்கதுரை.. தட்டி பறிப்பாரா தேன்மொழி.. அப்ப சவுந்தரபாண்டியனுக்கு? நிலக்கோட்டை.. தக்க வைப்பாரா தங்கதுரை.. தட்டி பறிப்பாரா தேன்மொழி.. அப்ப சவுந்தரபாண்டியனுக்கு?

    அதிருப்தி

    அதிருப்தி

    ஆனால் ஒரு சிக்கல் என்னவென்றால், மக்களை பொறுத்த மட்டில் இவர் எப்போதுமே தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறாராம்! ஆரம்பத்தில் மக்களிடம் நல்ல செல்வாக்கை பெற்றவர்தான்.. ஆனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகுதான் தொகுதிக்குள் இவரை காணோம் என்று சொல்லப்படுகிறது. எனினும் "சில பல" விஷயங்களை தாராளமாக செய்தால் இவருக்கு வெற்றி கைகூடி வரவும் வாய்ப்புள்ளதாம்.

    18 தொகுதி இடைத்தேர்தல்.. யார் யாருக்கு இடையில் போட்டி.. மாஸ் லிஸ்ட் இதோ!

    எஸ். நாகராஜ்

    எஸ். நாகராஜ்

    அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ குணசேகரனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று இருந்த நிலையில், திடீரென கீழநெட்டூர் எஸ். நாகராஜன் களமிறக்கப்பட்டுள்ளாராம். இவர் ஒரு புதுமுகம். பொருளாதாரத்திலும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

    கேள்விக்குறியே

    கேள்விக்குறியே

    இருந்தாலும் இவரை வேட்பாளராக களமிறக்க காரணம், உள்ளூர் அமைச்சர் பாஸ்கரன்தான் என்று சொல்லப்படுகிறது. இதனால் சீட் கிடைக்காத முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் அதிருப்தி ஆகி உள்ளாராம். உள்ளடி வேலையில் இவர் இறங்கிவிட்டால், அதிமுக வெற்றி பெறுவது கேள்விகுறிதான் என்று சொல்லப்படுகிறது.

    அனுபவம் இல்லை

    அனுபவம் இல்லை

    திமுக வேட்பாளராக கரு காசிலிங்கம் (எ) இலக்கியதாசனை களமிறக்கி உள்ளது.இது யாருமே எதிர்பாராத ஒன்று. இவருக்கு எந்த முன் அனுபவமும் இல்லை, என்றும் பின்தங்கிய பொருளாதாரத்தை சேர்ந்தவர். அதனால் இப்போதைக்கு கூட்டணி பலத்தை நம்பிதான் களமிறங்கி இருக்கிறார்.

    விநியோகம்

    விநியோகம்

    அதிமுக-பாஜக எதிர்ப்பு அலை இருந்தபோதும், வெற்றிக்குரிய தாரக மந்திரத்தை யார் அதிகமாக பொதுமக்களிடம் விநியோகிக்கிறார்களோ அவர்களுக்கே அந்த மானாமதுரை மண்வாசனை கிட்டும் என்பதுதான் முதல்கட்ட கள நிலவரம் ஆகும்.

    English summary
    There is a tough competition between ADMK Candidate S.Nagaraj and DMK Candidate Ilayakiyadasan in Manamadurai Constitution
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X