Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிங்கப்பூர் பக்தர் கொடுத்த ஆர்டர்.. 1000 கிலோவில் பிரம்மாண்டமான திருப்பாச்சி அரிவாள்.. பாருங்க

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் திருப்பாச்சேத்தி பகுதிகளில் ஏராளமான அரிவாள் பட்டறைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் அரிவாள்கள் மிகவும் புகழ் பெற்றவை. மிகவும் தரமாக தயாரிக்கப்படும் அரிவாள்கள் பல்வேறு விவசாய பணிகளுக்கும், கோயில்களுக்கும் பயன்படுகின்றன. இந்நிலையில் பக்தர் ஒருவர் அய்யனார் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த திருப்புவனத்தில் 35 அடி உயரத்தில் ராட்சத அரிவாள் ஆர்டர் கொடுத்திருந்தார். அந்த ராட்சத அரிவாளர் தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மற்றும் திருப்பாச்சேத்தி பகுதிகள் பல ஆண்டுகளாக அரிவாள்கள் தயாரிப்புக்கு பிரபலமானது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தயாராகும் அரிவாளுக்கும், இங்கு தயாராகும் அரிவாளுக்கும் வித்தியாசம் என்னவென்றால், அரிவாளின் முனை (மூக்கு) வளைவும், பள பளவென தீட்டுவதால் பதமும் வேறு அரிவாளில் இந்த அளவிற்கு பார்க்க இயலாது. இந்த அரிவாளில் வெட்ட, வெட்ட பதம் ஏறும் பக்குவம் இருக்கும். அதேபோல் திருப்பாச்சேத்தி மற்றும் திருப்புவனம் பகுதியில் அரிவாளின் எடையும் குறைவாக இருக்கும். பிடித்து லாவகமாக வீச முடியும் என்பது சிறப்பு அம்சம் ஆகும். அந்த காலத்தில், மன்னர்கள் மற்றும் படை வீரர்கள் போரிடுவதற்கு தகுந்த தடுப்பு கேடயம், வாள், கத்தி, வேல் கம்பு, சுருள் கத்தி, சூரி கத்தி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட பகுதியாக இருந்துள்ளது.

Singapore Devotee Places Order for 1000 Kg Tirupachi Scythe as Temple Offering in Pattukottai

தற்போதைய நிலையில் திருப்புவனத்தில் 10-க்கும் மேற்பட்ட அரிவாள் தயாரிக்கும் பட்டறைகள் உள்ளன. இங்கு விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் மண்வெட்டி, கடப்பாரை, கதிர் அறுக்கும் அரிவாள், அரிவாள்மனை, விறகு வெட்ட பயன்படும் அரிவாள், இறைச்சி வெட்ட பயன்படும் கத்திகள் உள்பட பல பொருட்கள் தயாரிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதேபோல் கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ராட்சத அரிவாள்களும் தயாரிக்கப்படுவதும் வழக்கம் ஆகும். நேர்த்திக்கடன் செலுத்துபவர்களுக்காக திருப்புவனம் பகுதியில் தலா 15, 18, 21 அடி உயரத்தில் அரிவாள்கள் தயாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் திருப்புவனத்தில் அரிவாள் பட்டறை நடத்தி வரும் சந்திரசேகர் என்பவரிடம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவரும், தற்போது சிங்கப்பூரில் வசித்து வருபவருமான பக்தர் ஒருவர் அய்யனார் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக 35 அடி உயரத்தில் அரிவாள் தயாரித்து கொடுக்குமாறு ஆர்டர் கொடுத்துள்ளார். அதன்படியே பட்டறையில் 35 அடி உயர அரிவாள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்தது. தற்போது அரிவாள் தயாரிப்பு பணி இறுதி கட்டத்தில் உள்ளது. அந்த அரிவாள் பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கிறது. பொதுவாக திருப்புவனம் பகுதியில் 15, 18, 21 அடி வரை அரிவாள்கள் தயாரிக்கப்படுமாம்.

முதன் முதலாக 35 அடி உயரத்தில் அரிவாள் செய்ய ஆர்டர் எடுத்து தயாரித்து வருவதை அந்த ஊர் மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். இந்த அரிவாள் சுமார் ஒரு டன் எடையில் தயாரிக்கப்படுவதாக பட்டறை உரிமையாளர் சந்திரசேகர் கூறினார். ஆயிரம் கிலோவில் உள்ள இந்த அரிவாளை கிரேன் அல்லது பொக்லைன் எந்திரம் மூலமே தூக்கி கனரக லாரிகளில்தான் ஏற்றிச்செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரிவாள் பட்டுக்கோட்டையில் உள்ள அய்யனார் கோவிலுக்காக தயாரிக்கப்படுகிறதாம். அரிவாள் 25 அடி நீளத்திலும், கைப்பிடி 10 அடி நீளத்திலும் தயாரிக்கப்படுவதாக பட்டறை உரிமையாளர் சந்திரசேகர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+