சிவகங்கையில் நேருக்கு நேர் மோதிய அரசு பஸ்கள்.. விபத்து எப்படி நடந்தது? பஸ் கண்டக்டர் பேட்டி
சிவகங்கை: திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசு பஸ்சில் வந்த கண்டக்டர் விபத்து குறித்து கூறுகையில், நான் பஸ்சில் கடைசியில் நின்று டிக்கெட் எடுத்து கொண்டிருந்தேன். திடீரென சட்டாருன்னு ஒரு சத்தம் கேட்டது.. அவ்வளவு தான்.. நான் மயங்கிவிட்டேன்.. டிரைவருக்கு தான் என்ன ஆனது என்றே தெரியவில்லை" என கூறியுள்ளார்.
சிவகங்கை அருகே இன்று மாலை 4.30 மணியளவில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் பஸ்சில் இருந்த பெண்கள் 9 பேர், ஆண்கள் இரண்டு பேர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேருக்கு நேர் மோதிய அரசு பஸ்கள்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் உட்கோட்டம் நாச்சியார்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட விவேகனந்தா பாலிடெக்னிக் கல்லூரி அருகே தான் இந்த விபத்து அரங்கேறியுள்ளது. காங்கேயத்தில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற (TN 39 N 0198) அரசு பேருந்தும், காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற (TN 63 N 1776) அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு காரைக்குடி அரசு மருத்துவமனை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுகு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டனர்.
பஸ்சில் வந்த கண்டக்டர் பேட்டி
அவர்களுடன் அப்பகுதியில் வந்த வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணைக்கண்காணிப்பாளர், திருப்பத்தூர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். ஏற்கனவே தென்காசி அருகே இடைகால் பகுதியில் இரு தனியார் அரசு பஸ்கள் மோதிய விபத்தில் 7 பேர் பலியாகி இருந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் மீண்டும் இரு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி சென்ற அரசு பஸ்சில் வந்த பஸ் கண்டக்டர் கூறியதாவது:- நான் திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி சென்ற அரசு பஸ்சில் டிக்கெட் எடுத்துக்கொண்டிருந்தேன்.
டிரைவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல
"பஸ்சின் பின் பகுதியில் நின்று கொண்டு நான் டிக்கெட் எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென டபாருன்னு ஒரு சத்தம் கேட்டது.. அவ்வளவு தான்.. நான் மயங்கிவிட்டேன்.. விழித்து பார்த்த போது நான் இங்கு இருக்கிறேன். டிரைவர் தான் என்ன ஆச்சுன்னு தெரியல.. அவருக்கு ரொம்ப அடின்னு சொன்னாங்க.." என்று கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications