Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவகங்கை எஸ்பி ஆசிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.. உத்தரவு போட்ட தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: கோயில் நகை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பகுதியில் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. அங்கு அஜித் (வயது 28) என்பவர் கோயிலின் தற்காலிக காவலாளியாக பணியாற்றி வந்தார். பொதுவாக அந்த கோயிலில் வெள்ளிக்கிழமை நாளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

sivagangai-case-tamil-nadu-government-orders-change-in-sivaganga-sp-waiting-list

அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை கோயில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த நிகிதா (வயது 42) தன் அம்மா சிவகாமியுடன் வெள்ளிக்கிழமை மதியம் கோயிலுக்கு சென்றுள்ளார். நிகிதா தன் கார் சாவியை அஜித்திடம் கொடுத்து, வண்டியை ஓரமாக நிறுத்த சொல்லி, தன் அம்மாவை கோயிலுக்கு அழைத்து செல்ல கேட்டுள்ளார்.

அஜித் தனக்கு கார் ஓட்ட தெரியாத காரணத்தால், அருகில் இருந்த மற்றொருவரிடம் காரை நிறுத்த சொல்லியதாக கூறப்படுகிறது. நிகிதா கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு திரும்பி வந்தபோது, தன் பையில் இருந்த தாலி செயின், வளையல், தங்க மோதிரம் உள்ளிட்ட 9.5 சவரன் தங்க நகை காணாமல் போனது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த நிகிதா இதுகுறித்து கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்புவனம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் காவலாளி அஜித்தை விசாரணைக்காக திருப்புவனம் காவல்நிலையம் அழைத்து சென்றனர். அவரும் தனக்கு எதுவும் தெரியாது என்று காவல்துறையிடம் கூறியுள்ளார்.

இதனால் அஜித்தை காவல்துறையினர் விடுவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) காவல்துறையின் ஸ்பெஷல் டீம் அஜித்தை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் விசாரணையின் போது அஜித்குமார் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணையை தொடங்கியுள்ள காவல்துறையினர், 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக 5 போலீஸார் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் கூடுதல் பொறுப்பாக சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொறுப்பை கவனிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+