ஷூவிற்குள் ஒடி ஒளியும் பாம்பு..ஷூக்களை சுத்தம் செய்த பின்பு உபயோகிக்க குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்க
சிவகங்கை: குழந்தைகளின் ஷூக்களை சுத்தம் செய்த பின்பு உபயோகிக்க சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று காரைக்குடி ஏஎஸ்பி ஸ்டாலின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோடிவில் ஷூவிற்குள் பாம்பு ஒன்று புகுந்து கொள்வதாக உள்ளது.
வேலைக்கு போக தயாரான நிலையில், அவசர அவசரமாக ஷூவினை தேடி, உடனே காலில் மாட்டிக்கொண்டு போவார்கள் சிலர். அப்படி போகும் போது திடீரென ஷூவிற்குள் காலில் ஏதோ ஊருவது போல் உணர்ந்தால் எப்படி இருக்கும். நிச்சயம் பேராபத்து தான்..

பாம்பு, பூரான், தேள் போன்ற விஷ ஜந்துகள் போதுவாக மழைக்காலங்களில் கதகதப்பான இடத்தை நோக்கியே செல்லும்.. அப்படி பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் விரும்பும் ஒரு இடம் தான் ஷூ. ஷூக்களை பொதுவாக சுத்தம் செய்தே பயன்படுத்த வேண்டும் என்பதை அடிக்கடி பல வீடியோக்களில் நாம் பார்த்திருப்போம். இதற்கு காரணம் சிறிய அல்லது பெரிய பாம்புகள் கூட சுருட்டிக்கொண்டு ஷூவிற்குள் படுத்துக் கொள்ளும் என்பதால்தான் .
குழந்தைகளின்
— Dr. R. Stalin IPS (@stalin_ips) November 7, 2023
ஷூக்கள் சுத்தம் செய்த பின்பு
உபயோகிக்க சொல்லிக் கொடுங்கள்... pic.twitter.com/9g2Qj5bqvG
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் துணை காவல் கண்காணிப்பளாராக உள்ளவர் ஸ்டாலின் ஐபிஎஸ். கால்நடை மருத்துவராக இருந்து ஐபிஎஸ் அதிகாரியான இவர் அடிக்கடி சமூக நலன் சார்ந்த வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருவார். அதன்படியே இன்றும் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் ஆண்கள் அணியும் பெரிய ஷூ ஒன்றிற்குள் கருமையான பாம்பு ஒன்று வேகமாக உள்ளே செல்கிறது. ஒரு சில வினாடிகளில் அந்த பாம்பு ஷூவுக்குள் சென்று மறைந்து கொள்வதாக வீடியோ உள்ளது. இதற்கு கேப்சன் போட்டுள்ள ஸ்டாலின் ஐபிஎஸ், குழந்தைகளின் ஷூக்களை சுத்தம் செய்த பின்பு உபயோகிக்க சொல்லிக் கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
உண்மை தான், பொதுவாக ஷூக்களை சுத்தம் செய்யாமல் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக இது மழைக்காலம் என்பதால் ஷூக்கள் போன்ற வெப்பமான இடத்தை நோக்கி பூச்சிகள் மற்றும் பாம்புகள் வரும். அப்படி வரும் போது ஷூவிற்குள் ஒளிந்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. அஜாக்கிரதையாக ஷூக்களை அப்படியே குழந்தைகளுக்கு போட்டுவிடக்கூடாது. குழந்தைகளையும் அப்படியே ஷூக்களை போட அனுமதிக்கக்கூடாது. நாமுமே ஷூக்களை உடனே எடுத்து போட்டுவிடக்கூடாது. குறைந்தது இரண்டு மூன்று முறை தலைகீழாக தட்டிவிட்டு, சுத்தம் செய்த பின்னரே போட வேண்டும். ஒருவேளை பாம்பு இருப்பது தெரியவந்தால் உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிப்பது நல்லது ஆகும்.












Click it and Unblock the Notifications